சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து... சற்று முன் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' மூன்றாவது லுக்..!

By manimegalai aFirst Published Jul 23, 2021, 1:02 PM IST
Highlights

சூர்யாவின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில், சற்று முன் மூன்றாவது லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு செம்ம விருந்து வைத்துள்ளது படக்குழு.
 

சூர்யாவின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில், சற்று முன் மூன்றாவது லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு செம்ம விருந்து வைத்துள்ளது படக்குழு.

தமிழ் சினிமாவில், தன்னுடைய கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. ஆக்ஷன் காட்சிகளை கூட அசால்டாக நடித்து மிரட்டும் சூர்யா நடிப்பில், உருவாகும் அனைத்து படங்களுக்கும்  ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சூர்யா தற்போது நடித்து வரும் 'எதற்கும் துணிந்தவன்' மற்றும் 'வாடிவாசல்' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சரியாக மாலை 6 மணிக்கு, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 40’  படத்தின் பெயர் 'எதற்கும் துணிந்தவன்' என்பதை அறிவித்து, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

மேலும், சரியாக 12 மணிக்கு 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு, சற்று முன்னர் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதத்தில், 3 ஆவது லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். முதல் இரண்டு போஸ்டரில் ரணகளமாக காணப்பட்ட சூர்யா, இந்த போஸ்டரில்... திரும்பி நின்று பார்ப்பது போல் உள்ளது. 

சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் நடிக்கிறார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

pic.twitter.com/PwCnaJod3t

— Sun Pictures (@sunpictures)

click me!