மன்னிப்பு கேட்ட வனிதா விஜயகுமார்..! சுரேஷ் தாத்தா கொடுத்த பதில்..!

Published : Jul 03, 2021, 12:04 PM ISTUpdated : Jul 03, 2021, 12:05 PM IST
மன்னிப்பு கேட்ட வனிதா விஜயகுமார்..! சுரேஷ் தாத்தா கொடுத்த பதில்..!

சுருக்கம்

நடிகை வனிதா விஜயகுமார், விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு ஜோடியாக ஆடி வந்த சுரேஷ் சக்ரவர்தியும் வெளியேறும் நிலை ஏற்பட்டதாக மன்னிப்பு கூறிய நிலையில், வனிதாவுக்கு சுரேஷ் சக்கரவர்த்தி ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார்.  

நடிகை வனிதா விஜயகுமார், விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு ஜோடியாக ஆடி வந்த சுரேஷ் சக்ரவர்தியும் வெளியேறும் நிலை ஏற்பட்டதாக மன்னிப்பு கூறிய நிலையில், வனிதாவுக்கு சுரேஷ் சக்கரவர்த்தி ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார்.

மேலும் செய்திகள்: கொலை மிரட்டல் விடுக்கும் இரண்டாவது கணவர்... நடிகை ராதா மீண்டும் போலீசில் பரபரப்பு புகார்!
 

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களை வைத்து விஜய் டிவியில் நடந்து வரும் 'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமான கெட்அப்பில் வந்து தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வந்தவர் வனிதா விஜயகுமார். குறிப்பாக இவர் சமீபத்தில் எடுத்த காளி அவதாரத்துக்குப் பாராட்டுக்கள் குவிந்தது.

இந்நிலையில் நேற்று திடீர் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார். இவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்... பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவி எனது குடும்பமாகிவிட்டது. குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். எனக்கு அங்கு நல்ல மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும் என நினைக்கின்றேன். ஆனால் பணிசெய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது. ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டதோடு அவமானப்படுத்தப்பட்டேன், இதற்கு அவரது திமிர் காரணமாக இருக்கலாம், அல்லது அவரால் எனது தொழில் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் இருக்கலாம்.

மேலும் செய்திகள்: மணப்பெண் கெட்டப்பில் மனதை அள்ளும் நயன்தாரா... கழுத்து நிறைய நகைகளுடன் சும்மா தகதகன்னு மின்னும் போட்டோஸ்...!
 

வேலை செய்யும் இடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை, பெண்களும் தான் மோசமாக நடத்துகின்றனர். பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்க நினைக்கிறார்கள். இருப்பினும் நான் எனது திரைப்பட வேலைகளில் பிசியாக இருப்பதால் தொடர்ந்து நீங்கள் என்னைத் திரைப்படங்களில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்: மாடர்ன் உடையில் மெர்சலாக்கிய 'செந்தூர பூவே' சீரியல் நாயகி ஸ்ரீநிதி! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

என்னை விட எல்லா விதத்திலும் மூத்த நபர் அவர், கடுமையாக உழைத்து முன்னேறியவர். முன்னேறக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் தாழ்மையோடு பார்ப்பதும், அவர்களது ஊக்கத்தைக் கெடுத்து அவமானப்படுத்துவதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது. குறிப்பாக நீண்ட நாட்களின் போராட்டத்துக்குப் பின், குடும்பம், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும், 3 குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார். பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை கெடுக்க கூடாது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவது வருத்தம் தான். மற்ற அத்தனை போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் என்னால் இந்த நிகழ்ச்சியில் இருந்து நீங்களும் வெளியேறும் நிலை உருவாகிவிட்டது என சுரேஷ் சக்ரவர்த்தியும், வனிதா விடைபெற்றதால் கலந்து கொள்ளமுடியவில்லை என்பதை கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். வனிதாவின் இந்த பதிவை தொடர்ந்து, அதற்க்கு ட்விட்டர் மூலம் பதில் கொடுத்துள்ள சுரேஷ் சக்ரவர்த்தி, "கவலை பட வேண்டும், என்னிடம் மன்னிப்பும் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய எதிர்கால நிகழ்ச்சியில் மிக சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்". 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!