முழுக்க முழுக்க ஒரு பொய்! ரூ.1 கோடி மோசடி குறித்து நடிகர் ஆர்கே சுரேஷ் பரபரப்பு விளக்கம் !

Published : Jul 03, 2021, 10:29 AM IST
முழுக்க முழுக்க ஒரு பொய்! ரூ.1 கோடி மோசடி குறித்து நடிகர் ஆர்கே சுரேஷ் பரபரப்பு விளக்கம் !

சுருக்கம்

பிரபல  தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ்  தன் வீட்டை விற்பதற்காகக் கடன் வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்  என்று வீணா என்பவர் சில நாட்களுக்கு முன்பு காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.  

பிரபல  தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ்  தன் வீட்டை விற்பதற்காகக் கடன் வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்  என்று வீணா என்பவர் சில நாட்களுக்கு முன்பு காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இது சம்பந்தமாக விளக்கம் அளிப்பதற்கும் தன் தரப்பு ஆவணங்களைக் கொடுப்பதற்கும் ஆர்.கே .சுரேஷ் நேற்று திடீர் என காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது தன் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஆணையாளர் வசம் கொடுத்து விட்டு வெளியே வந்தவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது...

"நான் எந்த மோசடியும் செய்யவில்லை. என்மீது என் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. அது முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய்யான புகார்" என்றார்.

மேலும் அவர் பேசும்போது, "நான் இந்தச் சினிமா துறையில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். தயாரிப்பாளராகப் பல படங்கள் தயாரித்துள்ளேன். பல படங்களை விநியோகம் செய்துள்ளேன். என்னைப் பற்றியும் எனது நாணயம் பற்றியும் அனைவருக்கும் தெரியும். நான் எனது தேவைக்காக வேறு வீடு வாங்கியதால் நான் வாழ்ந்த வீட்டை விற்றேன். நான் விற்றேன் இன்னொருவர் வாங்கினார். இவ்வளவுதான் இதிலுள்ள விஷயம்.

நான் என் வீட்டை விற்பதற்காக ஏன் இன்னொருவருக்கு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும்?  அதிலே நான் மோசடி செய்ய வேண்டும்? இது முழுக்க முழுக்க ஒரு உள்நோக்கத்தோடு ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யான புகார். விற்கப்போகும் என் வீட்டுக்காக நான் ஏன் கடன் வாங்க வேண்டும்? 

என்மீதான இந்த பொய்ப்புகார்  வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலால் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான எனது விளக்கத்தையும் என் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் இன்று ஆணையாளர் அலுவலகத்தில் நான் கொடுத்திருக்கிறேன். அந்த பொய்யான  புகாரின் மீது விசாரிப்பதாக ஆணையாளர் அவர்கள் கூறியுள்ளார்." இவ்வாறு நடிகர் ஆர்.கே .சுரேஷ் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!