அழுகாத குறையாய் பேசும் வடிவேலு..! போலீசை ஏமாற்ற இப்படியா? உருக்கமாக வெளியிட்ட வீடியோ..!

Published : Apr 28, 2020, 01:31 PM ISTUpdated : Apr 28, 2020, 01:42 PM IST
அழுகாத குறையாய் பேசும் வடிவேலு..! போலீசை ஏமாற்ற இப்படியா? உருக்கமாக வெளியிட்ட வீடியோ..!

சுருக்கம்

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மற்றும் அதன் தீவிரம் குறித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மற்றும் அதன் தீவிரம் குறித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இன்றி, வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கூறிவருகிறார்கள்.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தடுப்பதற்காக, போலீசார் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகிறார்கள். அதே போல் மற்றொரு புறம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற, மருத்துவர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா பற்றி, பாடல் உள்ளிட்ட பல்வேறு விதமாக ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மீம்ஸுகளின் மன்னன், வைகை புயல் வடிவேலு, தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, காவலர்களுக்கும், காவல் துறையினருக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: அட... இது எப்படி உங்களுக்கு தெரியும்?... மாஸ்டர் கார்ட்டூனால் மனம் நொந்த மாளவிகாவை குஷியாக்கிய விஜய் ரசிகர்!
 

இந்த வீடியோவில் அவர் கூறி உள்ளதாவது.. "என்னமோ நடக்குதுங்க, கடவுள் இறங்கி விட்டான். கடவுள் எல்லோரையும் சோதிக்கிறான். இந்த சோதனையில் அனைவரும் பாஸ் ஆகி விடவேண்டும். போலீசார் வேண்டும் என்றே யாரையும் அடிக்கவில்லை. அடித்தால் தான் மக்கள் கேட்பார்கள் என்று தான் அடிக்கிறாங்க.

மேலும் அதற்கான சரியான காரணத்தை கூறினால் வெளியில் விட்டுவிடுறாங்க. நம்மை காப்பாற்ற உயிரை பணையம் வைத்து நிற்கிறாங்க. கலவரம் நடந்தால் தானே லத்தி சார்ஜ் பண்ணனும், இப்போ உயிரை காப்பாற்ற லத்தியை எடுக்க வேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்: ஊரடங்கு ஓய்வில் வெளிவரும் குஷ்புவின் குடும்ப பொக்கிஷங்கள்! இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு!
 

முன்னடி எல்லாம் கால்களில் தான் அடிப்பாங்க. இப்போது முதுகில் அடிக்கிறார்கள். அதுக்காகவே வண்டியில் போகும் ஒருவர் தகர தட்டை முதுகில் வைத்து கொண்டு செல்கிறார். போலீசார் அடிக்கும்போது, டங் டங் என சத்தம் வருது.

ஆனால் மீண்டும் போலீசை ஏமாற்ற வேண்டும் என நினைக்காதீர்கள். மக்களை காப்பற்ற வேண்டும் என கடவுளை கும்பிடுங்கள் என கூறியுள்ளார் வடிவேலு.

இவரின் இந்த புதிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!