ஆக்ஷன் காட்சிகளைவிட செண்டிமெண்ட் தான் ரசிகர்களை கட்டிப்போடும்... நேர்கொண்ட பார்வை 22 நிமிட ஸீன்ஸ்!!

By sathish kFirst Published Jul 26, 2019, 11:56 AM IST
Highlights

விஸ்வாசம் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து பாலிவுட் ரீமேக்கான பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கவுள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’ பார்வை என்ற தலைப்பில் வினோத் இயக்கியுள்ளார். அஜித் வக்கீலாக நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து பாலிவுட் ரீமேக்கான பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கவுள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’ பார்வை என்ற தலைப்பில் வினோத் இயக்கியுள்ளார். அஜித் வக்கீலாக நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில்,நான்காவதாக ‘அகலாதே...’ என்ற பாடல் வெளியானது . இந்த பாடலை யுவன் இசையமைத்து பாடியிருக்கிறார். பா.விஜய் பாடல் வரிகளை எழுத யுவனுடன் இணைந்து பிரித்வி பாடியிருக்கிறார். இந்த பாடல் கணவன் - மனைவிக்கு இடையேயான பாசம், காதல் மற்றும் புரிதலை விளக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவியிடம் ஒரு நொடி கூட என்னை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும். என் வாழ்வில், நடுவில் வந்த உறவு என்றாலும், நெடுந்தூரம் வருபவள் நீதான். என் குறைகள் நூறை மறந்து, எனக்காக தன்னை அர்பணித்தவள் என்று கணவன் மனைவியை புகழும்  பாடல் வரிகளை அமைத்திருக்கிறார் பா.விஜய். 

மெலோடி பாடல்களால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் யுவன். 
இந்த பாடல் வரிகளுக்கு மனதை மயக்கும் விதத்தில் இசையமைத்திருக்கிறார்.   இந்த பாடல் வரிகளுக்கேற்ப பின்னணியில் அஜித், வித்யா பாலன் புகைப்படங்கள் அணிவகுக்கின்றன. தல அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கும்  வித்யா பாலனின் அழகிய முகமும் பாடலைப் போல வசீகரிக்கின்றன. மொத்தத்தில் ‘அகலாதே’ பாடல் கணவன், மனைவிக்கு இடையேயான காதல் சொட்ட சொட்ட சுவையான தேனாக உருவாகியிருக்கிறது.

தற்போது இந்த படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்கெனவே உறுதியான நிலையில், தற்போது படத்தின் கால அளவு 158.11நிமிடங்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்தியில் வெளியான பிங்க் 136 நிமிடங்கள் கால அளவைக் கொண்டிருந்தது. படம் உருவாகிவரும் போதே  ஹெச்.வினோத் பிங்க் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழுக்கு ஏற்ப முக்கியமாக அஜித் ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்துள்ளதாக கூறியிருந்தார். 

அதனால் வித்யா பாலன், அஜித்க்கும் இடையேயான காட்சிகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறதாம், விஸ்வாசம் படத்தில் ஆக்ஷன் காட்சிகளை விட செண்டிமெண்ட் காட்சி தூக்கலாகவும் ரசிகர்களை கட்டிப்போட்டதால், அதேபோல இந்த படத்திலும் கணவன் மனைவிக்குமான காதல், செண்டிமெண்ட் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிங்க் படத்தை விட 22 நிமிடங்கள் அதிகமாக இருப்பதால் தல ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

click me!