போதையற்ற தமிழ்நாடு என்ற இயக்கத்தின் மூலம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவங்கி உள்ள ஒரு கோடி கையெழுத்து திட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்து போட்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மது மற்றும் புகைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், தற்போது சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கங்களுக்கு எதிராக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போதையற்றதமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை துவங்கி உள்ளது.
அதிகரித்து வரும் போதை பழக்கங்களால் இளைஞர்கள் சீரழிந்து வருவதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. போதை பழக்கத்தை தடுப்பதற்காக, அரசியல் ரீதியாகவும், போலீசாரும், அதிகாரிகளும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே முழுமையாக போதை பழக்கத்தில் இருந்து தமிழகத்தை காக்கவும், நம் இளைஞர்கள் எதிர்காலத்தை மீட்க முடியும் என்கிற கருத்தை முன்வைத்து, கடந்த 12ஆம் தேதி இந்தத் திட்டத்தை மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான N.சங்கரய்யா துவங்கி வைத்தார்.
undefined
தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கையெழுத்து இயக்கம் மூலம், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. லட்ச கணக்கான மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கையெழுத்து போட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஏற்கனவே போதை பொருளுக்கு எதிராக தங்களுடைய ஆதரவை கையெழுத்து மூலம் நடிகர் கமலஹாசன், மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் உறுதி செய்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.
போதையேற்ற தமிழ்நாடு இயக்கத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்து போட்ட போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுக்கும் இந்த கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 27 ஆம் தேதியோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணீரில் மூழ்கிய பி.வாசு குடும்பம்! முக்கிய பிரபலம் காலமானார்..!