கண்ணீரில் மூழ்கிய பி.வாசு குடும்பம்! முக்கிய பிரபலம் காலமானார்..!

By manimegalai a  |  First Published Feb 25, 2023, 10:14 AM IST

சந்திரமுகி 2 படத்தை இயக்கி வரும், பி.வாசுவின் சிறிய தந்தையும், பழம்பெறும் ஒளிப்பதிவாளருமான எம் சி சேகர் காலமானார்.
 


தமிழ் சினிமாவில், 1986 ஆம் ஆண்டு வெளியான 'ஆயிரம் கண்ணுடையாள்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான எம்சி சேகர், பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கேமரா மேனாக பணியாட்டினார். குறிப்பாக இவர் ஒளிப்பதிவாரலாக பணியாற்றிய பணக்காரன், உழைப்பாளி, சேதுபதி ஐபிஎஸ், வால்டர் வெற்றிவேல், ரிக்சா மாமா, லவ் பேர்ட்ஸ், பன்னீர் புஷ்பங்கள், கூலி, ராஜரிஷி, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று வெற்றிபெற்ற படங்களாகும்.

இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ள இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள திரை உலகிலும் ஒலிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு காரணமாக ஏற்படும் உடல் நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு தன்னுடைய 91 வது வயதில் காலமானார்.

Tap to resize

Latest Videos

வாவ்... இது பிக்பாஸ் ஜனனியா? பார்க்க விண்ணை தாண்டி வருவாயா திரிஷா மாதிரி மாறிட்டாங்களே..! லேட்டஸ்ட் போட்டோஸ்!

இவர் பிரபல இயக்குனர் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் நாயரின் உடன் பிறந்த தம்பி ஆவார். குறிப்பாக பி.வாசு இயக்குனராக அறிமுகமான பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவாரலாக பணியாற்றி உள்ளார். 

மளமளவென வளர்ந்து விட்ட அஜித்தின் மகன் ஆத்விக்குடன் நேரு ஸ்டேடியத்தில் ஷாலினி அஜித்! வைரலாகும் போட்டோ!

மேலும் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட படங்களை தன்னுடைய சகோதரர் பீதாம்பரம் நாயருடன் இணைந்து எம் சி சேகர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவு, இயக்குனர் பி.வாசு குடும்பத்தை தற்போது கலங்க செய்துள்ளது. எனவே விறுவிறுப்பாக நடந்து வந்த சந்திரமுகி 2 படப்பிடிப்பு, சில நாட்கள் நடைபெறாது என கூறப்படுகிறது. எம்.சி.சேகர் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இளைஞர்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!