
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். பின்னர், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை நீண்ட அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்திவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரஜினி அந்த அறிவிப்பை வெளியிட்ட அன்றே அவருடைய வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். அரசியலுக்கு அழைப்பு விடுத்து முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் தலையில் அறப்போராட்டம் நடைபெற்றது. தலைவரின் உத்தரவை மீறி அறவழிப்போராட்டத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. இருப்பினும் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் நேற்று நடந்த போராட்டம் குறித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் நடத்தியிருக்கிறார்கள். ஓர் நிகழ்ச்சியை கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.
தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.