மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் படையெடுத்த அன்பு குரூப்? என்ன நடக்கும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Published : Jan 11, 2021, 11:11 AM IST
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் படையெடுத்த அன்பு குரூப்? என்ன நடக்கும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் அன்பை காட்டி அனைவரையும் அரவணைக்கிறேன் என கூறிய அர்ச்சனா சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த அன்பு குரூப்பின் தூண்களான நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் அர்ச்சனாவுக்கு முன்னரே ஒரே நாளில் வெளியேற்றப்பட்டனர் என்பது நாம் அறிந்தது தான்.  

பிக்பாஸ் வீட்டில் அன்பை காட்டி அனைவரையும் அரவணைக்கிறேன் என கூறிய அர்ச்சனா சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த அன்பு குரூப்பின் தூண்களான நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் அர்ச்சனாவுக்கு முன்னரே ஒரே நாளில் வெளியேற்றப்பட்டனர் என்பது நாம் அறிந்தது தான்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அன்பு குரூப்பை சேர்ந்த, அர்ச்சனா, நிஷா, ரேகா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது தான் தற்போதைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

அன்பு குரூப்பில் தற்போது சுக்குநூறாக உடைந்த நிலையில், வெளியில் சென்ற போட்டியாளர்களும் தற்போது யார் சிறப்பாக விளையாடி வருகிறார், யார் மீது தவறு என்பதை உணர்ந்து, இறுதி சுற்றுக்கு சென்றுள்ள சக போட்டியாளர்கள் அனைவரையும் உற்சாக படுத்த வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.

வாசல் வழியாக வராமல், போட்டியாளர்கள் அனைவரும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, மூவரும் வருகிறார்கள். இவரைகளை பார்த்து மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி வீட்டிற்குள் சென்று, மிகவும் மிஸ் செய்ததாக ஒவ்வொருவரும் கட்டி தழுவி தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவது தான் தற்போதைய புரோமோவில் வெளியாகியுள்ளது.

அந்த புரோமோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!