படப்பிடிப்பிற்கு நடுவே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்து திரும்பினார்
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தபடியாக, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்" என்ற திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பாண்டிச்சேரியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாக நடந்து வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லால் சலாம் பட குழு திருவண்ணாமலை வந்தடைந்தனர். தற்பொழுது அங்கு சூட்டிங் நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்தை காண அவருடைய ரசிகர்கள் பெரிய அளவில் சூட்டிங் நடந்த இடத்தில் குவிந்தனர்.
இதையும் படியுங்கள் : லியோ திரைப்படம் - என்னோட கேரக்டர் பெயர் "J-ல" ஆரமிக்கும் - GVM
இதனால் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டு, பின் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள், மன மகிழ்ச்சியில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, சுனில், வசந்த் ரவி மற்றும் விநாயகன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் தற்பொழுது நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பிற்கு நடுவே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்து திரும்பினார்.
கோயில் நிர்வாக ஊழியர்கள் அவருக்கு சிறந்த வரவேற்பு அளித்து, மரியாதை செலுத்தினர். தற்பொழுது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள் : திருவண்ணாமலைக்கு விசிட் அடித்த ரஜினி... ரவுண்ட் கட்டிய ரசிகர்கள்!