
2023 ஆம் ஆண்டை நேற்று இரவு 12 மணியோடு வழியனுப்பி வைத்து விட்டு, 2024-ஆம் ஆண்டை மக்கள் கோளாகலமாக வரவேற்றனர். பல நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி, டான்ஸ் என சில இளம் ரசிகர்களும், பிரபலங்களும் புத்தாண்டை கொண்டாடிய நிலையில், மக்கள் பலர் பீச், பார்க், போன்ற பொது இடத்தில் ஒன்று கூடி பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடினர்.
அதேபோல் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தொடர்ந்து ரசிகர்களுக்கும், மக்களுக்கும், தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலமாகவும், அறிக்கை வெளியிட்டும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று காலை முதலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்தை பெற, அவரது வீடு அமைந்துள்ள போயஸ் தோட்டத்தின் வீட்டு வாசலில் பல ரசிகர்கள் காத்திருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டில் இருந்தபடி... கையசைத்தும், முத்தங்களை பரக்கவிட்டும், இந்தாண்டு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக அமைய தன்னுடைய வாழ்த்துக்களை கூறினார்.
சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி, போட்டுள்ள பதிவில்... "பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம்.
புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து". என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.