மர்மமாக நடக்கும் ஆராய்ச்சி.. இடையில் மிரட்டும் BGM - சிவாவின் அயலான் - நச்சுனு ஒரு அப்டேட் கொடுத்த இசை புயல்!

Ansgar R |  
Published : Dec 31, 2023, 11:26 AM IST
மர்மமாக நடக்கும் ஆராய்ச்சி.. இடையில் மிரட்டும் BGM - சிவாவின் அயலான் - நச்சுனு ஒரு அப்டேட் கொடுத்த இசை புயல்!

சுருக்கம்

Ayalaan BGM Score : அயலான் படம் வருகின்ற ஜனவரி 12ம் தேதி பொங்கல் ரீலிஸ் திரைப்படமாக வெளியாகவுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயனின் 14வது திரைப்படமாக உருவாகவிருந்து, தற்பொழுது அவருடைய 20வது திரைப்படமாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் "அயலான்". கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான அடித்தளம் இடப்பட்ட நிலையில் போதிய தொழில்நுட்ப வசதி இல்லாததால் இந்த திரைப்படம் சற்று தள்ளிப்போனது என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தலைப்புடன் வெளியானது. அதன் பிறகு ஏற்பட்ட பெரும் தொற்று காரணமாக படபிடிப்பு தள்ளிப்போன நிலையில், நவம்பர் 2022 ஆம் ஆண்டு அயலான் பட பணிகள் முழுமையாக துவங்கியது. 

திருமணமாகி 14 வருடத்துக்கு பின் காதல் கணவரை விவாகரத்து செய்தார் அயலான் பட நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய திரை உலக வரலாற்றிலேயே சுமார் 4500கும் மேற்பட்ட விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகளை கொண்டு உருவாகும் ஒரு திரைப்படமாக அயலான் இருக்கின்றது. நடிகர் தனுஷின் "கேப்டன் மில்லர்", அருண் விஜயின் "மிஷன் சாப்டர் ஒன்" மற்றும் சிவகார்த்திகேயனின் "அயலான்" ஆகிய மூன்று திரைப்படமும் வருகின்ற பொங்கல் திருநாளிற்கு வெளியாக இருக்கிறது.

மிக மிக நீண்ட வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை குறி வைத்து இந்த திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் அயலான் திரைப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தில் வரும் ஒரு காட்சிக்கான பின்னணி இசை அமைக்கும் பணி குறித்த வீடியோ ஒன்றை ஏ.ஆர் ரகுமான் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அயலான் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படம் என்பதால் முற்றிலும் வித்தியாசமான முறையில் அவர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த காணொளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

'என் வகுப்புத் தோழர்', நண்பன் ஸ்ரீனிவாசன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்
கூலி படத்தின் லைஃப் டைம் வசூலை முதல் நாளே வாரிசுருட்டிய அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்