சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிக்க உள்ள 170 ஆவது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்கும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 'தர்பார்', 'அண்ணாத்த' என அடுத்தடுத்து தோல்வி படங்களில் துவண்டு போயிருந்த ரஜினிகாந்துக்கு, இப்படம் தரமான கம் பேக்காக அமைந்த நிலையில், இப்படத்தை வெற்றி படமாக மாற்றிய ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தன்னுடைய நன்றிகளையும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
'ஜெயிலர்' மற்றும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, மாலத்தீவுக்கு சென்று ஒரு வாரம் ஓய்வெடுத்த ரஜினிகாந்த், இதைத் தொடர்ந்து 'ஜெயிலர்' படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். இந்த பயணம் முடிந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பிய சில நாட்களில், தற்போது மீண்டும் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று மனைவியுடன் வழிபட்டு வருகிறார்.
பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் 'ஜெயிலர்'..! 12 நாட்களில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ள 170-வது படத்தின் படப்பிடிப்பு துவங்குவது துவங்கும் தேதி மற்றும் படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள தகவலில், தலைவர் 170-ஆவது படத்தின் பூஜை ஆகஸ்ட் 26 ஆம் தேதி, சென்னை லீலா பேலஸில் நடைபெற உள்ளதாகவும்... இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டருக்கு எதிரான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்துக்கு வில்லனாக மலையாள ஹீரோவான ஃபகத் பாசில் நடிக்க உள்ளாராம். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஷர்வானந்த், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தை இயக்குனர் TJ ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
கதறி அழும் நந்தினி ! குணசேகரனுக்கு எதிராக திரும்பிய கதிர்.. செம்ம ட்விஸ்ட்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!
மேலும் சமீபத்தில் இந்த படத்திற்கு இயக்குனர் ஞானவேல் 'வேட்டையன்' என பெயர் வைத்ததாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.