கடந்த 7 மாதங்களில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகி ரஜினிகாந்த் படங்கள் அசத்தல் வெற்றி பெற்றுள்ளன. காலா, 2.O மற்றும் பேட்ட என வெளியான படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளன.
இயக்குநர் பாலச்சந்தரால் அபூர்வராகங்கள் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 1978 ஆண்டு வெளியான பைரவி படத்தில்தான் ரஜினிகாந்த் கதாநாயகன் ஆனார். அன்று தொடங்கி இன்று வரை ரஜினிதான் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்.
பொதுவாக ரஜினிகாந்த் படங்கள் என்றால் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இடைவெளி இருக்கும். தொடக்கத்தில் ஓர் ஆண்டுக்கு ஓர் படம் வெளியாகிக் கொண்டிருந்தது.
பின்னர் தமிழ் சினிமா ஸ்ட்ரைக், திருட்டு விசிடி என தமிழகத்தில் குழப்பம் ஏற்பட்டபோது ரஜினி நடத்த படங்களின் எண்ணிக்கை குறைந்த போனது. அதுவும் ரஜினிக்கு உடல்நலமில்லாமல் போனபோது மூன்று ஆண்டுகள் வரை அவரது படங்கள் வெளிவராமல் இருந்துள்ளன.
பொதுவாக சூப்பர் ஸ்டார் படம் வெளிவருகிறது என்றாலே அன்று தமிழகத்திற்கே திருவிழா தான். இந்நிலையில் ரஜினியின் நடிப்பில் கடந்த 7 மாதங்களில் மட்டும் காலா, 2.0, பேட்ட என 3 படங்கள் திரைக்கு வந்துவிட்டன. இந்த முன்னு படங்களும் தற்போது ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளன.
இது ஒரு அபூர்வமான நிகழ்வாகவே கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடுத்தடுத்து 3 ரஜினி படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
அண்மையில் வெளியான பேட்ட திரைப்படம் இன்று வரை சக்கைப்போடு போட்டு வருகிறது. கிட்டதட்ட 20 நாட்களுக்கு மேல் ஆகியும் பேட்ட படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
என்ன இருந்தாலும் ரஜினி ரஜினிதான் !! ரஜினி எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான் !! அவரை அடித்துக் கொள்ள நிச்சமாக வேறு ஆள் இல்லை என்பதே உண்மை