
'பேட்ட' படத்திற்குப் பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி காவல் அதிகாரியாக நடித்துள்ள 'தர்பார்' படத்தில் இருந்து சூப்பர் ஸ்டாரின் என்ட்ரி பாடலான 'சும்மா கிழி' பாடல் வெளியாகி ரசிகர்களால் வெறித்தனமாக ரசிக்கப்பட்டு வருகிறது.
தலைவர் படம் குறித்து எந்த தகவல் வந்தாலும் அதை கொண்டாடும் ரசிகர்களுக்கு, தலைவரின் பாடலே வருகிறது என்றால், சொல்லவா வேண்டும்... அதிலும், முதல் முறையாக சூப்பர் ஸ்டார், தமிழ் சினிமாவில் பல வெற்றிபங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இணைந்துள்ள 'தர்பார்' படத்திற்கு, ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
பொங்கல் விருந்தாக வெளியாக உள்ள 'தர்பார்' படத்தின், முதல் சிங்கிள் பாடலான 'சும்மா கிழி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிரூத் இந்த பாடலை சும்மா பின்னி பெடல் எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். எஸ்.பி.பாலசுப்ரமணியன் குரல் இந்த பாடலுக்கு மிகப்பெரிய பிளஸ். ஏற்கனவே இவர் எஸ்.பி.பி 'பேட்ட' படத்தில் பாடிய மரணமாஸ் பாடலுக்கு நிகராக இப்பாடலும் உள்ளது என்றே கூறலாம்.
அதே போல், விவேக்கின் பாடல் வரிகள் அனல் பறக்கும் அளவிற்கு உள்ளது. மொத்தத்தில், இப்பாடல் தர தப்பட்டைகள் கிழித்து தொங்கவிட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.