அமெரிக்காவில் மீ டூ புகாரில் சிக்கிய சூப்பர் ஸ்டார்..! துடைக்க முடியாத அவலம்..!

Published : Dec 29, 2018, 09:52 AM IST
அமெரிக்காவில் மீ டூ புகாரில் சிக்கிய சூப்பர் ஸ்டார்..!  துடைக்க முடியாத அவலம்..!

சுருக்கம்

மீ டூ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்தப் புகாரில் சிக்கியுள்ளார் சூப்பர் ஸ்டார்! அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

மீ டூ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்தப் புகாரில் சிக்கியுள்ளார் சூப்பர் ஸ்டார்! அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

இரவு மணி 11.30 .அமெரிக்காவிலுள்ள ஒரு பார்.கிட்டத்தட்ட பார் மூடப்போகிற நேரம். அப்போது,அந்த பார் வாசலில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய நபரைப் பார்த்த இளைஞனுக்கு இன்ப அதிர்ச்சி. வந்தவர் சூப்பர் ஸ்டார். அவரைப் பார்த்ததும் உறசாகமாகி அவரைப் பார்த்து சின்னதாகப்  புன்னைகைத்திருக்கிறான்! அவரும் கேஷுவலாக  சிரித்திருக்கிறார். அவன் சிரித்தபடி அருகே வந்து அவரோடு ஒரு செல்ஃபி  எடுக்க விரும்புவதாச் சொன்னதும், அவன் தோளில் கைபோட்டபடி அவனைப்பற்றி விசாரிக்கிறார்.

தனக்கு பதினெட்டு வயதாவதாகவும் இதே பாரில்தான் வேலை செய்வதாகவும் இப்போது ட்யூட்டி முடிந்து கிளம்புவதாகவும் அந்த இளைஞன் சொல்ல, அவனை மீண்டும் பாருக்குள் அழைத்துசென்று சூப்பர்ஸ்டாரே அவனுக்கும் விஸ்க்கி வாங்கிதந்திருக்கிறார்.நாலைந்து ரவுண்டுக்குப்  பிறகு இருவரும் பாருக்கு வெளியே வந்து தம்மடித்தபடி பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அந்த இளைஞன் தன் செல்ஃபோனை எடுத்து தன் பெண் தோழியை.அழைத்து நான் இப்போது யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் தெரியுமா என்று பெருமையாகச் சொல்ல அந்தப் பெண் அதை நம்பவில்லை!இப்போதே படமெடுத்து இன்ஸ்டாகிராமில் போடுகிறேன் பார்: என்று அவன் சூப்பர் ஸ்டாரை படம் எடுக்க முயன்றிருகிறான்.

சூப்பர் ஸ்டாரோ அவன் பேண்ட் ஜிப்பை கீழே இறக்க முயன்றிருக்கிறார்.பையன் அதையும் வீடியோ எடுத்து விட்டு தப்பி ஓடி விட்டான்! இந்த சம்பவம் நடந்தது அமெரிக்காவின் மாச்சசூஸெட்ஸ் மாநிலம் நாண்ட்டுகெட் கவுண்ட்டியில் உள்ள ஒரு பாரில். அந்த சூப்பர்ஸ்டாரின் பெயர் கெவின் ஸ்பைசி!யூஸ்வல் சஸ்பெக்ட்ஸ்,எல்.எ காண்ஃபிடன்சியல்,பே இட் ஃபார்வர்டு படங்களில் நட்டித்தவர். இரண்டு முறை ஆஸ்கர் விருதுகள் வாங்கியவர்.கோல்டந் குளோப் அவார்டும் வாங்கி இருக்கிறார்.

பாஸ்ட்டன் நகரில் உள்ளூர் தொலைகாட்சி ஒன்றில் அறிப்பாளராக இருந்த இளைஞனின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஐம்பத்தொன்பது வயதாகும் கெவின் ஸ்பைசி தற்போது நடித்துக் கொண்டு இருக்கும் ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் வெப் சீரீஸிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். முறையற்ற பாலியல் ஆசையால் மீடூ புகாரில் சிக்கிய ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் கெவின் ஸ்பைசியின்  புகழும் சீட்டுக் கட்டு மாளிகை போல் ஒரே இரவில் சரிந்து விட்டது!

இந்த விவகாரத்திற்கும், அமெரிக்கா சென்றுள்ள நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கும் சத்தியமாக எந்த சம்ப்பந்தமும் இல்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?