
மக்களை கவரும் கலக்கலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் எப்போதும் விஜய் தொலைக்காட்சி முன்னணி வகிக்கிறது. சீரியல், காமெடி ஷோ, பாட்டு, நடனம், விவாதம் என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, இதில் பங்கேற்ற பலரும் திரைப்படங்களில் பிரபல பாடகர், பாடகிகளாக உருவெடுத்து வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி நித்யஸ்ரீ. ஜூனியர் குட்டீஸ் எல்லாம் இப்போது வளர்ந்து விட்டார்கள். அதிலும் குறிப்பாக நித்யஸ்ரீ-க்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். அவரை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இறுதி சுற்று வரை மேடை ஏறிய நித்ய ஸ்ரீயின் குரல் தற்போது சிங்கப்பூர், மலேசியா வரை கேட்கிறது.
பாடகியாக மட்டுமின்றி மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வரும் நித்யஸ்ரீ இசை ஆல்பங்களிலும் நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் நித்ய ஸ்ரீ ஆல்பம் ஒன்றின் ஷூட்டிங்கில் பங்கேற்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்டேண்ட் காட்சியில் நடிக்க முயன்ற போது நிலைதடுமாறி விழுந்த நித்யஸ்ரீக்கு லேசான அடிபட்டது. இதுகுறித்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நித்யஸ்ரீ, தன்னை நலம் விசாரித்தவர்களுக்கு நன்றியும், மெல்ல நலம் பெற்று வரும் தான் விரைவில் பூரண நலமடைவேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.