வில்லனாகும் விஷால்... பாலிவுட் அறிமுக வாய்ப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 29, 2021, 7:30 PM IST
Highlights

காரணம் இரும்புத்திரை படத்தில் அர்ஜூன் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரத்தை தான் விஷால் இந்தியில் நடிக்க உள்ளாராம். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக மட்டும் இல்லாமல் எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் நபராக வலம் வருபவர் விஷால். ஒருசமயத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். விஷால் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான இரும்புத்திரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. டிஜிட்டல் யுகத்தில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை தெளிவாக காட்சிப்படுத்தியிருந்த இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. 

இதில் விஷாலுக்கு ஹீரோயினாக சமந்தாவும், வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடித்திருந்தனர். தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்ததிரைப்படம் தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதன் மூலம் விஷால் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த செய்தி விஷால் ரசிகர்களை குஷியாக்காமல் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

காரணம் இரும்புத்திரை படத்தில் அர்ஜூன் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரத்தை தான் விஷால் இந்தியில் நடிக்க உள்ளாராம். இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும்  இன்னும் வெளியாகவில்லை. நடிகர்கள் மற்றும் பிற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tags
click me!