சன்னி லியோன் படத்துக்கு எதிர்ப்பு - கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

First Published Feb 10, 2018, 12:42 PM IST
Highlights
sunny leyone movie veeramadevi issue


பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன், பாலிவுட்டில் நாயகியானத்தைத் தொடர்ந்து கோலிவுட் திரையுலகிலும் 'வீரமாதேவி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வடிவுடையான் இயக்குகிறார்.

வீரமாதேவி:

சன்னி லியோன் நடிப்பில் உருவாகிவரும் 'வீரமாதேவி' திரைப்படம் வரலாற்று சிறப்பு மிக்க படமாகவும்,  வீரமாதேவி என்பவற்றின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக சன்னி தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டது மட்டும் இன்றி 150 நாள் கால் ஷீட் கொடுத்துள்ளார்.

படப்பிடிப்பு:

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் 'வீரமாதேவி' படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற இருக்கிறது. இதில் கவர்ச்சிப்புயல் சன்னியும் நடிக்க உள்ளார்.

போலீசில் புகார்:

இந்நிலையில் சன்னி கலந்துக்கொள்ளும் படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் இனோச் மோசஸ், நசரத்பேட்டை காவல் நிலையத்திலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். 

புகாரில் குறிப்பிட்டுள்ளது:

இணையதளத்தில் காணக் கிடைக்கும் சன்னி லியோன் நடித்த ஆபாச படங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்தினால் அவரை பார்க்க அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள். எனவே இந்த படப்பிடிப்பில் சன்னி லியோன் கலந்துக்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று மனுவின் குறிப்பிட்டுள்ளார்.  

click me!