"அதிகமாக காய்கறிகள் சாப்பிடுவதே என் சக்திக்கு காரணம்" - சன்னியை உசுப்பி விட்ட பீட்டா!!!

 
Published : Jun 03, 2017, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
"அதிகமாக காய்கறிகள் சாப்பிடுவதே என் சக்திக்கு காரணம்" - சன்னியை உசுப்பி விட்ட பீட்டா!!!

சுருக்கம்

sunny leone campaign for peta

அதிகளவான காய்கறிகளை சாப்பிட்டு வருவதே தன்னுடைய சக்திக்கு காரணம் `வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்` என்று பீட்டாவின் விற்கு ஆதரவாக விளம்பரம் செய்துவருகிறார் ஹாட் நாயகி சன்னி லியோன்.

மாட்டிறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கேரளா, புதுவை, கர்நாடகம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள்  தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு விளங்கும் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இதற்க்கு ஆதரவாகசினிமா நட்சத்திரங்களை கடந்த சில வருடங்களாக விளம்பர தூதர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரம் தலைதூக்கியுள்ள இந்த நேரத்தில் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக விளம்பரத்தில் நடித்துள்ளார் கவர்ச்சி நாயகி சன்னி லியோன், `வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்` என்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஜூன் மாதம் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது அதற்காக, பீட்டாவுடன் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஆதரவாக விளம்பரம் செய்து வருகிறார்.

மேலும் சைவ உணவிலேயே, வீகன் வகை உணவு என்றழைக்கப்படும், பால் பொருட்களையும் தவிர்க்கும் உணவுக்கு ஆதரவாக பீட்டாவின் பிரச்சார விளம்பரத்தில் நடித்துள்ள ஹாட் நாயகி சன்னி சைவ உணவாளராக மாறிடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பீட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், சன்னி லியோனின் பேட்டி இடம்பெற்றுள்ளது. அதில், தனக்கு அதிகமாக சக்தி இருப்பதை தான் கவனித்திருப்பதாகவும், அதிகமாக காய்கறிகளை சாப்பிட்டு வருவதாகவும் சன்னி கூறியுள்ளார்.

மேலும், இறைச்சி தொழிலில் விலங்குகள் வதைபடுவதுதான் மிகவும் மோசமான விஷயம் என்றும் கூறியுள்ளார்.

இதற்க்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு பீட்டாவின் சிறந்த நபராக சன்னி லியோன் தேர்வு செய்யப்பட்டு பீட்டாவின் நாய் கருத்தடை பிரசாரத்திலும் சன்னி பங்கேற்றுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகைகளை பார்த்ததும் ஈ போல் மொய்க்கும் ரசிகர்கள்... நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவுக்கும் இந்த நிலைமையா?
கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?