போட்றா பட்டாச...! ரசிகர்களுக்கு தனுஷ் தரவிருக்கும் "ச்சில் ப்ரோ!" சர்ப்ரைஸ்! சண்டே அன்று வெடிக்கப்போகும் முதல் பட்டாஸ்!

Published : Dec 01, 2019, 12:18 AM IST
போட்றா பட்டாச...! ரசிகர்களுக்கு தனுஷ் தரவிருக்கும் "ச்சில் ப்ரோ!" சர்ப்ரைஸ்! சண்டே அன்று வெடிக்கப்போகும் முதல் பட்டாஸ்!

சுருக்கம்

நடிகர் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம், ஒருவழியாக வெள்ளிக்கிழமை முதல் வெற்றிகரமாக திரையில் பாய்ந்து வருகிறது. 3 ஆண்டு காலம் கழித்து வந்தாலும், இந்தப் படம் தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.   

இந்த வேளையில், மற்றொரு சர்ப்ரைசான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது தனுஷின் 'பட்டாஸ்' படக்குழு.
தற்போது, துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பட்டாஸ்'. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், சினேகா, மெஹரின் பிர்சடா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

 'புதுப்பேட்டை' படத்திற்குப் பிறகு, தனுஷுடன் சினேகா இணைந்திருக்கும் படம் இது. 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகபிரம்மாண்டமாக உருவாகும் 'பட்டாஸ்' படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். 

வேகமாக தயாராகிவரும் இந்தப் படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ரிலீஸ் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், 'பட்டாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக், இன்று  (டிசம்பர் 1) மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 

தனுஷ் பாடியிருக்கும் "ச்சில் ப்ரோ" என்ற இந்தப் பாடலை, தனுஷே வெளியிடவுள்ளார் என்பதுதான் ரொம்பவே ஸ்பெஷல். 


இந்த மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பை, பட்டாஸ் என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டிங் செய்து சமூக வலைதளத்தை தனுஷ் ரசிகர்கள் அதிரவைத்து வருகின்றனர். விவேக்-மெர்வினின் இசைச் சரத்திலிருந்து முதல் வெடி ஞாயிற்றுக் கிழமை வெடிக்க உள்ளதால், இந்த சண்டே தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!