
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நமிதா. இவர் பீக்காக இருக்கும்போதே திருச்சியில் மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு குறைந்து போனது, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். இதையடுத்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்தது கொண்டார்.
இந்நிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இருந்து விலசி இன்று பாஜகவில் இணைந்தார்.
பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை சென்னை வந்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்போது, ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நடிகை நமீதா தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.