
சுந்தர் சி ஆசை, ஆசையாக எடுத்த "ஆக்ஷன்" திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதிரடி சண்டை காட்சிகள், மாஸ் சேசிங், சுந்தர் சியின் வழக்கமான மசாலா என அனைத்தும் இருந்தும் படம் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. இந்தப்படத்தில் விஷால், தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதையடுத்து டைரக்ஷனுக்கு சிறிது பிரேக் கொடுத்துள்ள சுந்தர் சி, நடிப்பில் இறங்கியுள்ளார். அரண்மனை 1 & 2 என இரண்டு வெற்றி பேய் படங்களை இயக்கிய சுந்தர் சி, தற்போது பேய் படம் ஒன்றில் நடித்துள்ளார்.
வி.இசட் துரை இயக்கியுள்ள "இருட்டு" படத்தில் சுந்தர் சி, காவல் அதிகாரியாக நடித்துள்ளார். நாளை இப்படம் திரைக்கு வர உள்ள நிலையில், "ஓ வரியா" என்ற வீடியோ சாங்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் வெளியாகியுள்ள பாடலில் ஓவர் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஹீரோயின் உடன் சுந்தர் சி ரொமான்ஸ் செய்யும் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என ஏகப்பட்ட கிளு,கிளு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இளசுகளை சுண்டி இழுக்கும் இந்த பாடல் யூ-டியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் காட்சிகளை படமாக்கும் போது தான் சுந்தர் சியின் மனைவி குஷ்பூ, கொடைக்கானல் வந்துள்ளார். மனைவி முன்னாடி ரொம்ப தர்ம சங்கடத்துடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்ததாக ஆடியோ ரிலீஸ் பங்ஷனின் போது சுந்தர் சி குறிப்பிட்டிருந்தார். அப்போ அவரு ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதற்கான காரணம் பாடலை பார்க்கும் அனைவருக்கும் கட்டாயம் புரியும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.