போதும் இதோட நிறுத்திக்கோங்க... அஜித் மகளிடம் கெஞ்சும் ரசிகர்கள்... எதற்காக தெரியுமா?

Published : Dec 05, 2019, 04:52 PM IST
போதும் இதோட நிறுத்திக்கோங்க... அஜித் மகளிடம் கெஞ்சும் ரசிகர்கள்... எதற்காக தெரியுமா?

சுருக்கம்

சமீபத்தில் கடற்கரையில் புடவை அணிந்த படி விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் அனிகா. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். அதைப் பார்த்த அஜித் ரசிகர்கள், "18 வயசிக்கு கீழ இருக்குற நீங்க ஏன் இப்படி கிளாமர் போட்டோ ஷூட் எடுக்குறீங்க, இப்படி எல்லாம் பண்ணாதீங்க" என அட்வைஸ் செய்து வருகின்றனர். 

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் கலக்கி வந்த அனிகா சுரேந்திரன் தமிழில் "என்னை அறிந்தால்" படத்தில் தல அஜித்தின் மகளாக அறிமுகமானார். அடுத்து "மா" குறும்படம் மூலம் நடிப்பில் அசரடித்தார். மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்து தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அனிகாவும், அஜித்தும் இணைந்து நடித்த கண்ணான கண்ணே பாடல் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. நிஜ அப்பா, மகள் போலவே அஜித், அனிகாவை தல ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். சமீபகாலமாக அனிகா செய்யும் வேண்டாத செயல்கள் தல ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது. 

14 வயதாகும் அனிகா எக்கச்சக்கமாக போட்டோ ஷுட் எடுத்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.  14 வயதிலேயே ஹீரோயின் சீட்டுக்கு துண்டு போட்டு இடம் பிடிக்கும் அனிகா, புடவை, மார்டன் டிரஸ், அறைகுறை ஆடை என விதவிதமாக போட்டோ ஷூட்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள், இந்த வயசில இப்படி ஒரு கவர்ச்சியா என வாய் பிளந்து நிற்கின்றனர். என்னதான் மலையாள ரசிகர்கள் அனிகாவின் புகைப்படங்களை ஆகா, ஓஹோ என புகழ்ந்தாலும், அஜித் ரசிகர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

சமீபத்தில் கடற்கரையில் புடவை அணிந்த படி விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் அனிகா. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள், "18 வயசிக்கு கீழ இருக்குற நீங்க ஏன் இப்படி கிளாமர் போட்டோ ஷூட் எடுக்குறீங்க, இப்படி எல்லாம் பண்ணாதீங்க" என அட்வைஸ் செய்து வருகின்றனர். 

சிலரே "தங்கச்சி தயவு செஞ்சி இப்படி பட்ட டிரஸ் எல்லாம் போடாதீங்க ப்ளீஸ்" என கெஞ்சி கோரிக்கை வைத்துள்ளனர்.  தல அஜித்தின் மகளாக நடித்ததால் தனி அடையாளம் கிடைக்கப்பெற்றவர் அனிகா. சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாது, மாடலிங் செய்து வரும் அனிகா ரசிகர்களின் கோரிக்கை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார் என்று பொறுந்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை