சம்பளத்தை குறைக்க மாட்டேன் என அடம்பிடித்த விஜய்... தயாரிப்பையே கைவிட்ட சன்பிக்சர்ஸ்...??

By Kanimozhi PannerselvamFirst Published Jul 14, 2020, 7:43 PM IST
Highlights

மேலும் அவ்வப்போது அடுத்ததாக விஜய் நடிக்க உள்ள 65வது படத்தின் பற்றிய புதிய புதிய தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

"பிகில்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "கைதி" புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். கடந்த மாதமே வெளியாக இருந்த இந்த படம், தற்போது கொரோனா  பிரச்சனை காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.இந்த படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருவதால், இப்போது விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. 

'மாஸ்டர்' திரைப்படத்தில்  விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து  நடித்துள்ளது. இந்த படம் ஓடிடி  தளத்தில்  வெளியாக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவதால், எப்போது திரையரங்கம் திறக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

மேலும் அவ்வப்போது அடுத்ததாக விஜய் நடிக்க உள்ள  65வது படத்தின் பற்றிய புதிய புதிய தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது தீவிரமடையும் கொரோனா பிரச்சனைகள் காரணமாக சம்பளத்தில் ஒரு தொகையை குறைத்து கொள்ள வேண்டுமென ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்யிடம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்தது. 

 

இதையும் படிங்க: “ஐ அம் இன் லவ்”... 3வது முறையாக காதல் வயப்பட்ட அமலா பால்... வைரலாகும் போட்டோஸ்...!

இதையடுத்து முதலில் மறுத்தாலும் பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்ததாக கூறப்பட்டது. ஆனால் விஜய் மட்டும் விடாப்பிடியாக சம்பளத்தை குறைக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படம் தயாரிக்கும் முயற்சியையே கைவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது விஜய், தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். அவர்களுக்கு மட்டும் சம்பளத்தை குறைக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

click me!