தல அப்போவே வேற லெவல்... பல வருடத்திற்கு முன் ஏரோ மாடலிங் மீது ஆர்வம் காட்டிய அஜித்..! வைரலாகும் அரிய வீடியோ..!

Published : Jul 14, 2020, 07:38 PM IST
தல அப்போவே வேற லெவல்... பல வருடத்திற்கு முன் ஏரோ மாடலிங் மீது ஆர்வம் காட்டிய அஜித்..! வைரலாகும் அரிய வீடியோ..!

சுருக்கம்

நடிப்பை தாண்டி, கார் ரேஸ், பைக் ரேஸ், புகைப்பட கலைஞர், ஏரோ மாடலிங், மெக்கானிக் என பல்வேறு திறமைகளைக்  கொண்டவர் தல அஜித் என்பது நாம் அறிந்த விஷயம் தான்.  

நடிப்பை தாண்டி, கார் ரேஸ், பைக் ரேஸ், புகைப்பட கலைஞர், ஏரோ மாடலிங், மெக்கானிக் என பல்வேறு திறமைகளைக்  கொண்டவர் தல அஜித் என்பது நாம் அறிந்த விஷயம் தான்.

கடந்த ஓரிரு வருடத்திற்கு முன் எம்.ஐ.டி. மாணவர்களின் ஆளில்லா விமானம்  உருவாக்குதலில் ஆலோசகராக முக்கிய பங்கு வகித்து வந்தார். எம்.ஐ.டி. மாணவர்கள் மருத்துவ உதவிகளுக்கான ஆளில்லா விமானத்தை தயாரிக்கும் பணியில் இவரும் இறங்கினார்.

தக்‌ஷா என பெயரிடப்பட்ட என குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த தக்‌ஷா ட்ரோன் அதிக நேரங்கள் பறந்து  சாதனை படைத்திருந்தது. 

மேலும் ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பியில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. உலகெங்கிலும் இருந்து 55 ஆளில்லா விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் அஜித் ஆலோசகராக இருந்து உருவாக்கிய தக்ஷா விமானம் இரண்டாவது பரிசை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தல அஜித்து பல வருடங்களுக்கு முன்பே ஏரோ மாடலிங் மீது கவனம் செலுத்திய அரிய வீடியோ ஒன்றை, பிரபல நடிகர் அஸ்வின் காக்குமானு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அஜித்துடன், தீனா பட ஒளிப்பதிவாளர், அரவிந்த் உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


 

/p>

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கல்யாணி என் தங்கச்சி... நாங்க ட்வின்ஸ்; முத்துவிடம் புது குண்டை தூக்கிபோட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்
பழனிவேல் முதல் கூண்டில் ஏறி வாக்குமூலம் கொடுத்த தங்கமயில் வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அதிரடி ஹைலைட்ஸ்!