ரூ.1 கோடி மோசடி! சன் மியூசிக் அனிசாவை அள்ளிச் சென்ற சென்னை போலீஸ்!

First Published Jul 26, 2018, 6:19 PM IST
Highlights
sun music TV anchor anisha arrested


சென்னையில் வீட்டு உபயோக மின் சாதனப் பொருட்கள் விற்பனையகம், டிராவல்ஸ் நடத்தி மோசடி ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக டி.வி  நிகழ்ச்சி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான அனிசா கைது செய்யப்பட்டுள்ளார்.   நெசப்பாக்கம் அம்மன் நகரை சேர்ந்தவர் அனிஷா. இவரது இயற்பெயர் பூர்ணிமா. ஆனால் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இவர் வி.ஜேவாக பணியாற்றிய போது தனது பெயரை அனிசா என்று மாற்றிக் கொண்டார். சன் மியூசிக் அனிசா என்றால் தெரியாத இளைஞர்களே இருக்க முடியாது. இவருக்கு என்று ரசிகர் வட்டம் கூட உண்டு. சக்தி முருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சீரியல்களிலும் அனிசா நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் ஜெயா டிவியின் தொகுப்பாளினியாகவும் அனிசா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அனிசா தனது கணவர் சக்தி முருகனுடன் சேர்ந்து,  ஷை எக்யூப்மன்ட்  என்ற வீட்டு உபயோக பொருட்களை மொத்தமாக வாங்கி சப்ளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தார். கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர்  நிறுவனத்தில் இருந்து மொத்தமாக  101 வீட்டு உபயோக ஏ.சி.க்களை இவர்கள் வாங்கியுள்ளனர். மொத்தமாக வாங்கி விற்பனை செய்து லாபம் பார்க்கலாம் என்பது அனிசாவின் கணக்கு.  101 ஏ.சிக்களுக்கான தொகையாக 37 லட்சம் ரூபாய் பேசப்பட்டுள்ளது. ஆனால் பேசியபடி அனிசா 37 லட்சம் ரூபாயை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அனிசா ஒரு செக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த செக்கும் வங்கியில் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனால் ஆத்திரம் அடைநத் பிரசாந்த் நேரில் சென்று கேட்ட போது அனிசா தனது கணவர், கணவரின் தம்பி மற்றும் சிலருடன் சேர்ந்து பிரசாந்தை மிரட்டினார் என்பது புகார்.

இதன் பின்னர் கே.கே. நகர் காவல் நிலையத்தில் அனிசா மற்றும் அவரது கணவர் சக்தி முருகன் உள்ளிட்டோர் மீது பிரசாந்த் குமார் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அனிசா, அவரது கணவரின் தம்பி ஹரிக்குமார், ரமேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவான அனிசாவின் கணவர் சக்தி முருகன், அவரது கூட்டாளிகள் அருண் மொழி, ஹரிகிருஷ்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.இந்த நிலையல், அனிசா டிராவல்1 நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக மற்றொரு புகார் எழுந்துள்ளது. 

கணவர்  - சக்திமுருகனுடன் இணைந்து ஸை லக்ஸரி என்ற டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளனர். அதாவது பி.எம்.டபிள்யூ, பென்ஸ், ஆடி போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்களை வாடகைக்கு விடுவது தான் இந்த டிராவல்சின் பணி. இவர்களிடம் இந்த சொகுசு கார்கள் கிடையாது. இதனால்  ஓ.எல்.எக்சில் சொகுசு கார்களை விற்பனை செய்ய விளம்பரம் பதிவிட்ட உரிமையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசி கார்களை தங்கள் நிறுவனத்திற்கு வாடகைக்கு தருமாறு கேட்டுள்ளனர். 

சன் மியூசின் அனிசா என்பதால் பலரும் நம்பி தங்கள் சொகுசு கார்களை கொடுத்துள்ளனர். ஆனால் வாடகைக்கு சொகுசு கார்களை கொடுத்த உரிமையாளர்களுக்கு தெரியாமல் காரின் ஆவணங்களை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்ற இவர்கள் பின்னர் டிராவல்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஏராளமான சொகுசு கார்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றியதாக 64 பேர் அளித்த புகாரின் பேரில், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!