பிரபல விளையாட்டு வீரருடன் நடிகை டாப்சிக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்...!

 
Published : Jul 26, 2018, 04:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
பிரபல விளையாட்டு வீரருடன் நடிகை டாப்சிக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்...!

சுருக்கம்

topsee and mathiyas marriage engagement

நடிகர் தனுஷ் நடித்து, தேசிய விருதை பெற்ற 'ஆடுகளம்' படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை டாப்சி. இந்த படத்தை தொடர்ந்து 'ஆரம்பம்', 'காஞ்சனா -2' , 'வைராஜா வை' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவருக்கு மிகபெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மேலும் பாலிவுட்டில் இவர் நடித்த 'பிங்க்', 'சபானா' போன்ற திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று, இவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது.

தற்போது முல்க், மென் மார்ஷியான், தட்கா, பத்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலைலயில் டாப்சிக்கும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுக்கும் காதல் மலர்ந்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது. அடிக்கடி இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களும் சமூக வலைத்தளத்தில் பரவியது.

சமீபத்தில் மும்பை ஓட்டலில் இருந்து கைகோர்த்தபடி வெளியே வந்தபோது மத்யாசும் நீங்களும் காதலிக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதில் அளித்த டாப்சி "இது என் சொந்த விஷயம் இது குறித்து பேச விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். 

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் டாப்சி குடும்பத்துடன் கோவா சென்றிருந்த போது, மத்யாசும் குடும்பத்தினருடன் வந்ததாகவும் அங்கு டாப்சிக்கும் மத்யாசுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இருவருமே உறுதி படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?
நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகைகள்; 2025 ல் திருமணம் செய்த நடிகைகளின் பட்டியல்!