விரைவில் குளிர்விக்க வருகிறது மழை..! தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு !

Published : Apr 15, 2020, 04:06 PM IST
விரைவில் குளிர்விக்க வருகிறது மழை..! தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு !

சுருக்கம்

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் ஜூன் 4 ஆம் தேதியும், கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதியும் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த பருவமழை இயல்பான அளவில் மழையைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.  

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் ஜூன் 4 ஆம் தேதியும், கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதியும் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த பருவமழை இயல்பான அளவில் மழையைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் கொரோனா இன்னொரு பக்கம் கோடைக்காலம் என தொடர்ந்து பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும்  இந்த தருணத்தில் மனதிற்கு ஆறுதல் தரும் விஷயமாக விரைவில் தென்மேற்கு மழை தொடங்க உள்ளது  என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.



சென்ற வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரளவிற்கு மழை பெய்தது.

சென்னையை பொறுத்தவரை பல பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது
அதன் படி, தற்போது சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும், சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி, செங்குன்றம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது



கோடைக்காலம் தொடங்கிய நாள் முதலே பெரிய அளவில் எந்த பகுதியிலும் மழை இல்லாமல் இருந்தது.  கடந்த பல நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் கோடை வெயில் ஏற்படுத்திய வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மழை குளிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் ஜூன் 4ஆம் தேதியும், கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதியும் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?