15 ஆயிரம் மாஸ்க் கொடுத்துட்டு அதுக்கு ரசீது வேற வாங்கி வந்த மக்கள் நீதி மய்யம்..!

Published : Apr 15, 2020, 03:24 PM ISTUpdated : Apr 15, 2020, 03:28 PM IST
15 ஆயிரம் மாஸ்க் கொடுத்துட்டு அதுக்கு ரசீது வேற வாங்கி வந்த மக்கள் நீதி மய்யம்..!

சுருக்கம்

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தமிழகத்தில், அதிகரித்து வரும் நிலையில், அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, தன்னார்வலர்களும், பிரபலங்களும், கட்சியின் சார்பிலும், மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.  

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தமிழகத்தில், அதிகரித்து வரும் நிலையில், அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, தன்னார்வலர்களும், பிரபலங்களும், கட்சியின் சார்பிலும், மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் தற்போதைக்கு மக்களின் உயிரை காத்து வரும் கவசமான மாஸ்க், சானிடைசர் போன்றவற்றின் தேவை அதிகமாக இருப்பதால், கட்சிகளின் சார்பில் இது போன்ற பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில், உலக நாயகன் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம்  சார்பாக 15 ,௦௦௦ மாஸ்குகள் வழங்கப்பட்டு, அதற்கான ரசீது பெற்று வரப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மக்கள் பணி பற்றி சமூக வலைத்தளத்தில், பேசி வரும் நடிகர் கமலஹாசன், இது போன்ற சிறு விஷயங்களுக்கு கணக்கு பார்க்கலாமா என இவருடைய அபிமானிகளை நினைக்க வைத்துள்ள இந்த சிறு துண்டு ரசீது பேப்பர்.



எனினும் உதவியின் அளவு முக்கியமில்லை என்றாலும், தக்க சமயத்தில் இது போன்ற உதவிகளை மக்கள் நீதி மய்யம் செய்தது பாராட்டுக்குரியது.  இந்த ரசீதை மட்டும் தவிர்த்திருக்கலாம் என்று சிலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!