
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறியவர் நடிகை சுஜா வருணி. இவர் கடந்த ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், சிவக்குமாரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி, அழகிய ஆண் குழந்தை பிறந்தது. 'அத்வைத்' என தங்களுடைய குழந்தைக்கு பெயர் வைத்தனர். இந்நிலையில் இது நாள் வரை குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சுஜா தற்போது வெளியிட்டுள்ளார்.
குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும், அவ்வப்போது குழந்தையின் முகத்தை காட்டாதவாறு, கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை சமூகவலைதளத்தில் சுஜாவாருணி தொடர்ந்து பகிர்ந்து வந்த நிலையில் தற்போது 'அத்வைத்', தன்னை அறிமுகம் படுத்தி கொள்வது போன்று வார்த்தைகளை எழுதி, மகனின் முகத்தை ரசிகர்களுக்கு முதல் முறையாக காட்டியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.