
அவர்களுடன் சத்யன், 'பவர் ஸ்டார்' ஸ்ரீனிவாசன், தேவதர்ஷினி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களே கைகோர்த்துள்ளன. ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ள கேப்மாரிக்கு, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
IT தொழிலாளர்களின் வாழ்க்கை சூழலை மையமாக வைத்து, முழுக்க முழுக்க ரொமான்டிக் காதல் கதையாக உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் எஸ்.ஏ.சி. இந்தப் படம்தான், அவர் இயக்கும் கடைசி படம் என்பதால் இன்றைய யூத் இயக்குநர்களுக்கே சவாவ் விடும் வகையில், டபுள் மீனிங் வசனங்கள், லிப் லாக் காட்சிகள் என கிளுகிளுப்பாகவும், கலகலப்பாகவும் கேப்மாரி படத்தை உருவாக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளாராம்..
ஏற்கெனவே சென்சார் ஃபார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்து, A சர்டிஃபிகேட்டுடன் ரிலீசுக்கு ரெடியாகவிருந்த 'கேப்மாரி' படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தளபதி ரசிகர்களே வறுத்தெடுக்கும் அளவுக்கு இந்த டிரைலர் வரவேற்பைப் பெற்றிருந்ததால், கேப்மாரியை ரிலீஸ் செய்வதற்கு நாள் பார்த்து வந்தது படக்குழு.
இந்த நிலையில், 'கேப்மாரி' படம் டிசம்பர் 6-ம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. "மாட்டிக்கிட்டான்.. மாட்டிக்கிட்டான்..." என்ற வாசகத்துன் டபுள் ஹீரோயின்களுடன் ஜெய் இருக்கும் இந்த போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாசகத்தை பார்த்த பலரும், இரண்டு பெண்கள்கிட்ட ஜெய் மாட்டிக்கிட்டான்னு சொல்றாரா? அல்லது கேப்மாரியை பார்க்க வருபவர்களைதான் மாட்டிக்கிட்டான்னு சூசகமாக சொல்கிறாரோ? என குழப்பமாக நக்கலடித்து வருகின்றனர். எதுஎப்படியோ! கேப்மாரி ரிலீஸ் ஆகும்போது யார்? மாட்டிக்கிட்டான் என்பது தெரிந்துவிடும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.