
சுசி லீக்ஸ் என்கிற பெயரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனுஷ், திரிஷா, ராணா, டிடி, சஞ்சிதா ஷெட்டி, என பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர், பிரபல பின்னணி பாடகி சுசித்ரா. இந்த பிரச்சனையின் காரணமாக அவர் தன்னுடைய கணவர் கார்த்திக்கிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
மன அழுத்தம் காரணமாக சுசி இது போல் நடந்து கொண்டதாகவும், அவருடைய சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் பல தகவல்கள் வெளிவந்த நிலையில் இதுவரை எது உண்மை என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் சுசி, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், மிகவும் காமெடியாக லோக்கல் சென்னை பாஷையில் டிக்டாக் செய்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அம்மாவின் ஆசையை நிறைவேற்ற பூப்பறிக்க செல்லும் ஒருவரை போட்டு விடுவது போல் உள்ள இந்த டிக் டாக் வீடியோ வைரலாகி வருகிறது.
வெளிநாடு சென்று, உரிய சிகிச்சைக்கு பின், மீண்டும் இந்தியா திம்பியுள்ள சுசி, விரைவில்... மீண்டும் தன்னுடைய காந்த குரலில் பாடல்களை பாடி, கோலிவுட் திரையுலகத்தில் முன்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வர வேண்டும் என்பதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.