பிக்பாஸ் வீட்டில் நுழையும் அடுத்த வயல் கார்டு போட்டியாளர் இவரா? வெளியான பரபரப்பு தகவல்..!

Published : Oct 20, 2020, 06:05 PM IST
பிக்பாஸ் வீட்டில் நுழையும் அடுத்த வயல் கார்டு போட்டியாளர் இவரா? வெளியான பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம், 4 ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். முதல் இரண்டு நாட்களிலேயே சுரேஷ் மற்றும் அனிதாவிற்குள் சண்டை உருவாகி செம்மா ஜோராக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.    

தற்போது நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் வயல் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா வருகை தந்தார். அதே நேரத்தில் நடிகை ரேகா கடந்த ஞாயிறு அன்று முதல் நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் உள்ள ஆஜித், பாலாஜி, அனிதா, சுரேஷ் மற்றும் ஆரி ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேற உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனால் பிக்பாஸ் தரப்பு அடுத்ததாக ஒரு, வயல் கார்டு பொறியாளரை இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை, சுசிலீக்ஸ் சுசித்ரா தான். இவர் பிரபல பாடகியாகவும், ரேடியோ ஜாக்கியாகவும் நன்கு ரசிகர்களால் அறியப்பட்டவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் இது குறித்து அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

ஏற்கனவே சாத்தான்குளம் விவகாரம் உள்பட பல விவகாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் எப்படி பட்ட ரணகளம் வெடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!