
பிரபல பாடகியும், ஆர்.ஜேவும் ஆனா சுஜிக்கு என்ன ஆனது என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கும்...???
அவர் ட்விட்டரில் சமீப காலமாக பதிவிடும் அணைத்து பதிவுகளின் சர்ச்சையாகவே இருக்கிறது... உண்மையாகவே அவர் தான் சொல்கிறாரா அல்லது அவரது கணக்கு ஹேக் பட்டுள்ளதா என சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நானும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தேன் தன்னை சிலர் தாக்கினர் என கூறினார்...ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என அவரிடம் பல ரசிகர்கள் கேள்வி கேற்க சுஜி எந்த ஒரு பதிலையும் கொடுக்க வில்லை...
கடந்த வாரம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தற்போது இயக்கி வரும் விஐபி 2 படம் குறித்து அவர் பேசுகையில், ஏற்கனவே இவர் எடுத்த கோச்சடையான் கார்ட்டூன் படத்தை நாங்கள் டிவியில் பார்த்துவிட்டோம் இரண்டாவது ஒரு படம் இயக்கி ஏன் கொடுமை படுத்துகிறீர்கள் என நேரடியாக தாக்கினர்.
பின் தனுஷ் குழுவினர் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்தார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .... இந்த பதிவுகள் அனைத்தையும் பார்த்து அதிர்ச்சியில் இருந்த பலருக்கும் மேலும் ஒரு ஷாக் கொடுத்துள்ளார் சுஜி .
தற்போது அவர் பதிவு செய்துள்ள ஒரு ட்விட்டில்... 'ஏய் தனுஷ் உன் நட்பு வட்டாரத்திடம் சொல்லு, இந்த விவாகரத்து பதிவு போடுவதற்கு எனக்கு அசிங்கமாக இருக்கிறது என்று, நான் ஒரு முட்டாள் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை மிகவும் வெறுப்பாக இருக்கிறது என கூறியுள்ளார்...
மேலும் இல்லை, இனி நான் விவாகரத்து செய்ய இருக்கிறேன் என கூறியுள்ளார்... இதுபோன்ற டிவீட்கள் உண்மையாகவே சுஜி தான் போடுகிறாரா என தற்போது பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து சுஜியின் கணவர் கார்த்திக்கிடம் ஒரு சிலர் கேட்டதற்கு இது குறித்து நான் தற்போது பதில் கூற முடியாது என்று கூறியுள்ளார்.
தனுஷ் தனர்பினர் சுஜி இது போன்ற தகவல்களை வெளியிட்டு வருவது குறித்து தனுஷ் பார்வைக்கு எடுத்து சென்றுள்ளதாகக்கூறியுள்ளனர் . தற்போது இந்த செய்தி திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது.
இந்த சர்ச்சைக்கு தனுஷ் என்ன பதில் கொடுப்பார் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.