சுச்சி லீக்ஸ் சுசித்ராவின் அடுத்த அதிரடி... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ...!

By Akshit Choudhary  |  First Published Dec 31, 2019, 1:26 PM IST

தனது அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


தமிழ் திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வந்த சுசித்ரா, "யாராடி நீ மோகினி"  உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017ம் ஆண்டு 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவியது. பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்ட அந்த வீடியோக்கள் திரைத்துறையில் பலரது தூக்கத்தை கெடுத்தது. 

Tap to resize

Latest Videos

குறிப்பாக தனுஷ், அனிருத், சின்மயி, ஆண்ட்ரியா, ஹன்சிகா, டிடி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலரது அந்தரங்க வீடியோக்கள் வெளியானதால் திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது. இதனால் சுசித்ராவிற்கும், அவரது கணவர் கார்த்திக்கிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரித்தனர். இந்நிலையில் தனது டுவிட்டர் அக்கவுண்ட்டை யாரோ ஹேக் செய்துவிட்டதாக புகார் கூறினார் சுசித்ரா. 

இந்த விவகாரத்தால் மனமுடைந்த சுசித்ரா திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகினார். அதன் பின்னர் வெளிநாட்டில் செட்டில் ஆன அவர், தனது அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

மன அழுத்தம் காரணமாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்த சுசித்ரா, சிங்கிள் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சுச்சி இஸ் லைப் எனப்படும் யு-டியூப் பக்கத்தில் சுசித்ரா பாடி, நடித்துள்ள I Dont kno பாடலை வெளியிட்டுள்ளார். 

தனது ஆண் நண்பர் ஒருவருடன் இணைந்து சுசித்ரா பாடியுள்ள அந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மீண்டும் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்க உள்ளதை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார் சுசித்ரா. 

click me!