அரசு மருத்துவமனையில் இளம் கதாநாயகி...!! கவனிக்க ஆள் இல்லாமல் அவதிப்படுவதாக பரபரப்பு..!!

Published : Dec 31, 2019, 12:54 PM IST
அரசு மருத்துவமனையில் இளம் கதாநாயகி...!!  கவனிக்க ஆள் இல்லாமல் அவதிப்படுவதாக பரபரப்பு..!!

சுருக்கம்

இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி மீண்டும் ஒரு திருமணம் செய்து அதிலும் கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் நடிகை ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . குடும்பச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் குழந்தைகளுடன் வறுமையில்  தவித்து வருவதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .  இப்போதெல்லாம் நடிகைகள் என்றாலே குடியிருக்க பங்களா பயணிக்க கோடிகளில் சொகுசு கார் என உல்லாசமாக வளம் வரும் நிலையில் ஒரு நடிகை மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது .

மலையாளத்தில் காதல் வாழ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா தமிழில் நல்லதொரு குடும்பம் ,  உன்னை கண் தேடுதே ,  உள்ளிட்ட படங்களில் நடித்து ஓரளவிற்கு பிரபலமானார் ஆனாலும் அடுத்தடுத்து படங்கள் இல்லாத நிலையில் பொருளாதார சிக்கலில் அகப்பட்ட இவர் இவன் வேற மாதிரி திரைப்படத்தில் நடிகை சுரபிக்கு அம்மாவாக நடித்திருந்தார் .  இந்நிலையில் நடிகை ஷர்மிளாவிற்கு  ஆர்த்தோ பிரச்சனை ஏற்பட்டது இதனால்  இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார் ,  கால் காயத்தால் மருத்துவமனைக்கு சென்ற அவரை மருத்துவர்கள் அட்மிட் ஆக வேண்டுமென கூறியுள்ளனர்.  இதனால் முதலில் தயங்கிய அவர் பின்னர்  அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றுள்ளார் .  பக்கத்து படுக்கைகளில்  இருக்கும் யாரிடமும் அவர் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார் . 

ஆனால் இவரை பார்த்த சிலர் இவர் நடிகை என்பதை கண்டுபிடித்துள்ளனர் .  அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவரை சந்திப்பதற்கு கூட யாருமே வரவில்லை என சொல்லப்படுகிறது .  இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி மீண்டும் ஒரு திருமணம் செய்து அதிலும் கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.  தன் பிள்ளைகளுக்கு  ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் அவர் தவித்து வருவதாகவும்  நடிகர் சங்கம் சார்பில் விஷால் அவருக்கு உதவி புரிந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது பட வாய்ப்புகள்  ஏதும் இல்லால்  பண பிரச்சினையில் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது இது குறித்து அவரிடம் விசாரித்ததில் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றது உண்மைதான் , ஏழைகளுக்காகத் தானே அரசு மருத்துவமனை என அவர் தெரிவித்து குறிப்பிடதக்கது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!