சசிக்குமார், பொன்ராமின் ‘எம்.ஜி.ஆர் மகன்’திருட்டுக்கதையா?...ஒரு பெரும்பஞ்சாயத்து வெயிட்டிங்...

By Muthurama LingamFirst Published Sep 27, 2019, 5:45 PM IST
Highlights

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள பத்திரிகையாளர் தேனி கண்ணன் தனது முகநூல் பதிவில்,...அன்பு நண்பர்களுக்கும் தமிழ் சினிமாவை தலைநிமிரவைத்த பெருமைமிகு படைப்பாளிகளுக்கும் வணக்கம். 2017 ல் ஒரு வார  இதழ் ஒன்பதாம் ஆண்டு நிறைவு மலர் ஒன்றை வெளியிட்ட.து. அந்த மலரில் படைப்பு ஒன்றை எழுதச்சொல்லி  ஆசிரியர் என்னை கேட்டுக்கொண்டார். நானும் இதயக்கனி என்ற பெயரில் தேனியில் எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது நடந்ததாக ஒரு கதையை எழுதியிருந்தேன்.  அந்தக்கதை இதுதான்.


‘எம்.ஜி.ஆர். மகன்’என்ற பெயரில் சசிக்குமார் நாயகனாக நடிக்க பொன்ராம்  இயக்கும் படம் தன்னுடைய கதையின் சாயலில் இருப்பதாகவும் அதைத் திருட்விட்டு சிம்பிளாக இன்ஸ்பிரேஷன் என்று சொல்லிவிடக்கூடாதென்றும் பத்திரிகையாளர் ஒருவர் எச்சரித்திருக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து நான்காவதாக பொன்ராம்  இயக்கும் படத்தின் படப்படிப்பு தேனியில் தொடங்கியது.சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக சசிகுமாருடன் இணைகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு எம்.ஜி.ஆர் மகன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள பத்திரிகையாளர் தேனி கண்ணன் தனது முகநூல் பதிவில்,...அன்பு நண்பர்களுக்கும் தமிழ் சினிமாவை தலைநிமிரவைத்த பெருமைமிகு படைப்பாளிகளுக்கும் வணக்கம். 2017 ல் ஒரு வார  இதழ் ஒன்பதாம் ஆண்டு நிறைவு மலர் ஒன்றை வெளியிட்ட.து. அந்த மலரில் படைப்பு ஒன்றை எழுதச்சொல்லி  ஆசிரியர் என்னை கேட்டுக்கொண்டார். நானும் இதயக்கனி என்ற பெயரில் தேனியில் எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது நடந்ததாக ஒரு கதையை எழுதியிருந்தேன்.  அந்தக்கதை இதுதான்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரண் தேர்தல் வந்தால் கடவுட் வைப்பது ஏழைகளுக்கு உதவிசெய்வது என்று பரபரப்பாக இருப்பார். எம்.ஜி.ஆர். போலவே மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லாதவராக இருப்பார்.. ஒருமுறைதேர்தல் பிரச்சரத்துக்காக தேனிக்கு வரும் புரட்சித்தலைவர் தன்னுடைய தீவிர பக்தர் ராஜ்கிரணை பற்றி கேள்வி பட்டு, அவரை அழைத்து சந்திக்கிறார். அப்போது அவருக்கு நெல்லிக்காய் கூடையை பரிசாக்கொடுக்கிறார் ராஜ்கிரண், மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து கொண்டு தனக்காக ராஜ்கிரண் நிறைய செலவு செய்து விழாக்கள் நடத்துவதையும் அன்னதானம் செய்வதையும் பாராட்டுகிறார். அப்போது சென்னை வந்து தோட்டத்தில் சந்திக்குமாறு சொல்லி விட்டு செல்கிறார்.

இருக்கும் தனது தங்கையை மருத்துவ மனையில் சேர்க்க கூட பணமில்லாமலிருக்கும் ராஜ்கிரண் தலைவரை சந்தித்து உதவிகேட்க சென்னை வருகிறார். அந்தநேரத்தில் பொன்மனச்செம்மல் திடீரென்று இறந்து விடுகிறார். ராமாவரம் செல்லும் ராஜ்கிரணை அதிமுகவை சேர்ந்த நிர்வாகி அடையாளம் கண்டு தலைவர் இறந்து போவதற்கு முன்னால் ஐந்து லட்சம் கொடுத்து உங்களிடம் கொடுக்க சொன்னார் என்று கொடுக்கிறார். இதை வாங்கிய ராஜ்கிரண் கதறி அழுகிறார்.

ஊருக்கு திரும்பும் ராஜ்கிரணுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. பிரசவ வலி வந்து தங்கை ஆண் குழந்தையை பெற்று பிரசவத்திலேயே இறந்து போகிறார். இதனால் மருமகனை வளர்க்க கல்யாணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். மருமகன் சிவகார்த்திகேயன் அவருக்கு ராமச்சந்திரன் என்று பெயரிட்டு வளர்க்கிறார். ஆனால் அவரோ பொறுப்பில்லாமல் வளர்கிறார். இதனால் மனம் வெறுத்துப்போன ராஜ்கிரண் மன வருத்தத்தில் இருக்கிறார். ஒரு நாள் சிவகார்த்திகேயனை அழைத்து நீ யார் தெரியுமா எம்.ஜி.ஆர். புள்ளடா என்று அவர் சில தகவல்களை சொல்கிறார். இதைக்கேட்டு மனம் மாறும் சிவா செய்யும் ஒரு காரியம் ஊருக்கே நல்லதாக முடிகிறது. இது நான் எழுதிய கதையின் அவுட் லைன் இது தான். இதில் பல சம்பவங்கள் உள்ளீடாக இருக்கிறது.
கூடவே மாமா என்பதை அப்பாவாகவும் மருமகனை மகனாகவும் மாற்றலாம் என்ற சான்ஸையும் வைத்திருந்தேன்.

இந்நிலையில் சமீபத்தில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்திற்கு எம்.ஜி.ஆர். மகன் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இது ஒரு வேளை நான் எழுதிய கதையாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. காரணம் பொன்ராம் அவர்களிடம் கதை விவாதத்தில் இருந்த என் அருமை நண்பர் . அவரது கதை சம்மந்தமாக என்னை சந்திக்க வந்தார். அப்போது அவரது கதைக்கு தீர்வுகள் சொல்லி அதை அவர் முழுமையாக்கினார். பிறகு நான் அவரிடம் சொன்ன கதைதான் நான் எழுதியிருக்கும் எம்.ஜி.ஆர். கதை. . ஒரு வேலை அவரையறியாமல் சொல்லியிருக்கலாம். ஆனால் இதை நான் பயன் படுத்திக்கொண்டு படப்பிடிப்பு முழுவதும் முடியும் வரை காத்திருந்து ரிலீஸ் நேரத்தில் இதைச் சொல்லி யாரையும் கஷ்டபடுத்த விரும்பவில்லை.


இது குறித்து நான் என் நண்பரிடம் கேட்டபோது அவர் உங்கள் கதையில் பேரனாக சொன்னீர்கள் இவர் மகன் என்று தானே சொல்லியிருக்கிறார். உங்கள் கதை வேறு. இது வேறு என்றார்.நல்லது. என்னுடைய கவலையெல்லாம் என் ஹீரோ பச்சை சட்டை என்றும் பொன்ராம் ஹீரோ சிவப்பு சட்டை என்றும் சொல்லி கதைக்கு வேறு வேறு அடையாளம் கொடுத்து விடக்கூடாது என்பதுதான். அல்லது திருட்டுக்கு இப்போதெல்லாம் சிம்பிளாக சொல்லும் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் விட சசிகுமார் மீதும் பொன்ராம் மீதும் என் மண்ணின் கலைஞர்கள் என்ற வகையில் பாசத்தையும் மரியாதையையும் வைத்திருக்கிறேன். இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று கருதுகிறேன்.மற்றபடி உண்மையிலேயே பொன்ராம் படம் வேறு . கதையாக இருக்கும் பட்சத்தில் படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார் அவர். ஆக ஒரு பெரும்பஞ்சாயத்து வெயிட்டிங்...

click me!