
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் ஸ்ருதி ஷண்முக பிரியா. இந்த சீரியலை தொடர்ந்து கல்யாணப்பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். மிகவும் ஹோம்லியான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதை, வழக்கமாக வைத்திருந்த ஸ்ருதி... கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் மட்டுமே ஆகும் நிலையில், நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ஸ்ருதியின் காதல் கணவர் அரவிந்த் சேகர் உயிரிழந்தார். இவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதே ஆகும் அரவிந்த் சேகர் உயிரிழப்பு அவரின் குடும்பத்தினரை மட்டும் இன்றி ஸ்ருதியின் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான ஒரே வருடத்தில் காதல் கணவரை பறிகொடுத்துவிட்டு, நிற்கும் ஸ்ருதிக்கு ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் பலர் தொடர்து ஆறுதல் கூறி வரும் நிலையில், தன்னுடைய கணவர் மரணம் குறித்து தற்போது ஸ்ருதி அழகிய ரொமாண்டிக் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சி பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
20 வருஷ பகையை மறந்து... பிரபலத்தின் சிகிச்சைக்கு உதவிய விக்ரம்! குவியும் பாராட்டு..!
இந்த பதிவில், அவர் கூறியுள்ளதாவது... "பிரிந்தது உடல் தான், ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னைச் சூழ்ந்து கொண்டு, இப்போதும்... எப்போதும் என்னை பாதுகாக்கிறது என் காதலே அரவிந்த். உங்கள் மீதான என் அன்பு இப்போது, மேலும் மேலும் அதிகரித்துள்ளது. நாம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நல்ல நினைவுகளை வைத்திருந்தோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் செய்கிறேன். மேலும் உன்னை அதிகம் நேசிக்கிறேன் அரவிந்த். என் அருகில் நீங்கள் இருப்பதை உணர்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் பலர் ஸ்ருதிக்கு தைரியமாக இருக்கும்படி, தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.