சென்னையில் ஜவான் படத்தின் ஆடியோ வெளியீடு விழா! எங்கே, எப்போ நடக்குது? முழு விவரம் இதோ

Published : Aug 29, 2023, 06:41 PM ISTUpdated : Aug 29, 2023, 07:11 PM IST
சென்னையில் ஜவான் படத்தின் ஆடியோ வெளியீடு விழா! எங்கே, எப்போ நடக்குது? முழு விவரம் இதோ

சுருக்கம்

சென்னையில் ஜவான் படத்தின் ஆடியோ வெளியீடு விழா நடைபெற உள்ளது. நீண்ட காலமாகவே விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருக்கும் நயன்தாரா, 'ஜவான்' படத்திற்கு மட்டும் ஓகே சொல்லியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஷாருக்கானின் 'ஜவான்' படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெளியீட்டுக்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் 'ஜவான்' பட பாடல்களை ஆகஸ்ட் 30 அன்று சென்னையில் வெளியிட உள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் எங்கே நடக்கப்போகிறது? எப்போது நடக்கப்போகிறது? அனைத்தையும் விவரமாகத் தெரிந்துகொள்ளலாம்.

Onam Celebration Photos: குடும்பத்துடன் குதூகலமாக ஓணம் பண்டிகை கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்!

'ஜவான்' ஆடியோ ரிலீஸ்:

'ஜவான்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது . சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஆடிட்டோரியத்தில் கடந்த காலங்களில் பல தமிழ் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. இந்த வெளியீட்டு விழாவில் ஏராளமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர்.

கல்லூரி மாணவர்கள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் முன்னிலையில் மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

சிறப்பு விருந்தினர் யார்?

'ஜவான்' படத்தில் மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கும் ஷாருக்கான் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து வரப்போகிறார். ஏற்கெனவே சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஜவான் படத்திற்கான படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறார். இப்போது மீண்டும் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு வருகிறார். விழாவில் ஷாருக் தவிர இயக்குனர் அட்லி, விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் படக்குழுவினரும் கலந்துகொள்வார்கள்.

சென்னையில் நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நயன்தாரா கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. நயன்தாரா நீண்ட காலமாகவே தனது படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதை வழக்கமாக வைத்திருக்குகிறார். ஆனால், 'ஜவான்' படத்திற்கு மட்டும் ஓகே சொல்லியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக, ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'ஜவான்' த்ரில்லர்

அட்லீ எழுதி இயக்கிய 'ஜவான்' திரைப்படம் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படம். ரமணகிரிவாசனுடன் இணைந்து அட்லீ வசனம் எழுதியுள்ளார். இந்தப் படம் மூலம் தான் அட்லீயும் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்கள். விஜய் சேதுபதி, பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விமானத்தில் 18+ ஏரியா அறிமுகம்! உல்லாசமாகப் பயணிக்க என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!