
கேரளா மாநிலம் விளிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021-ம் ஆண்டு போதைப்பொருள்கள் மற்றும் ஏகே 47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ விசாரித்து வந்தது. ஏற்கனவே இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், லிங்கம் என்கிற ஆதிலிங்கம் என்பவரை சென்னை சேலையூரில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான குணசேகரன் என்பவருக்கு லிங்கம் பிணாமியாக இருந்ததுமட்டுமின்றி, போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை அரசியல், சினிமா, கிரிப்டோ கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... அதை ஆணவத்தில் சொல்லல.. ஹீரோ ஆயிட்டேன் அதான்.. எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - லாரன்ஸ் வெளியிட்ட Video!
தொடர்ந்து லிங்கத்திடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நடிகை வரலட்சுமியிடம் இவர் உதவியாளராக பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வரலட்சுமியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகக்கோரி நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ. சார்பில் சம்மனும் அனுப்பப்பட்டு உள்ளது.
தற்போது ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு படத்திற்கான படப்பிடிப்பில் இருப்பதாக கூறிய வரலட்சுமி ஷூட்டிங் முடிந்ததும் விசாரணைக்கு ஆஜராவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். போதைப்பொருள் வழக்கில் நடிகை வரலட்சுமியிடம் விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பிய சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு... பேரனுக்கு சொப்பு சாமான் வாங்கி சென்ற லதா ரஜினிகாந்த்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.