இது ஆரம்பம் தான்... லட்சுமி ராமகிரிஷ்ணனுக்கு பிரபல நடிகை பதிலடி..!

 
Published : Dec 20, 2017, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
இது ஆரம்பம் தான்... லட்சுமி ராமகிரிஷ்ணனுக்கு பிரபல நடிகை பதிலடி..!

சுருக்கம்

sripriya replay for actress lakshmi ramakrishnan

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தொலைக்காட்சியில் நடத்தி வரும், நிகழ்ச்சியின் மூலம் பல நல்ல விஷயங்களைச்  செய்து வந்தாலும், என்னவோ இவரை தொடர்ந்து கலாய்ப்பவர்கள் மட்டும் குறையவே இல்லை.

ஏற்கனவே இவரை கடுப்பேற்றுவது போல் ஒரு சில தொலைக்காட்சிகளில் இவரை கலாய்த்துள்ளனர். அடுத்து,  நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடித்த, கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் இவரை வெறுப்பேற்றுவது போல் ஒரு காட்சி இடம்பெற்றது.

அதெல்லாம் தற்போது ஓய்ந்துள்ள நிலையில், கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்று வரும் 'அருவி' திரைப்படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மோசமாக விமர்சிக்கும் விதத்தில், சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து, இந்தப் படத்தின் இயக்குனர் அருண் பிரபுவை விமர்சித்திருந்தார்.

தற்போது இவருடைய கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகை ஸ்ரீ பிரியா... தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  

சொல்வதெல்லாம் உண்மை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். உண்மை என்று பெயர் வைத்துவிட்டு நிறைய தவறுகள் நிகழ்ச்சியில் நடப்பதாக பலரின் குற்றச்சாட்டு. இதுதான் ஆரம்பம், நிகழ்ச்சிக்கு எதிராக நாம் எழுப்பும் குரல் சாதாரண மக்களுக்கு போய் சேரும் என பதிவு செய்துள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்