
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகையாக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டாலும், தன்னை ஒரு தமிழ் நடிகை என்று தான் இன்று வரை தன்னை கூறிக்கொள்கிறார். கடைசியாக தமிழில் இவர் நடித்து வெளிவந்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்கள் மட்டுமே இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
இந்தப் படங்களைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, தொடரி, பைரவா, பாம்பு சட்டை ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
எனினும் தற்போது சூர்யாவிற்கு ஜோடியாக, தானா சேர்ந்த கூட்டம், விஷாலுக்கு ஜோடியாக சண்ட கோழி 2, விக்ரமுக்கு ஜோடியாக சாமி 2, மற்றும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர் தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ள 'அஞ்ஞாதவாசி' படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், கிளாமராக உடை அணியவில்லை என்றாலும் இவருடைய மேக்கப் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதனால் பலர் இது கீர்த்தி சுரேஷா என அதிர்சியாகினர்.
ஏற்கெனவே மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கி பல இன்னல்களை சந்தித்து வரும் கீர்த்தி தற்போது இந்த மேக்கப் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். பேஷன் டிசைனிங் படித்த கீர்த்தி இப்படி ஒரு மேக்கப்பில் வந்துள்ளது பலரிடமும் நெகடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.