
விழிப்புணர்பு நிகழ்ச்சி என்கிற பெயரில், நடிகை லட்சுமி ராமக்ரிஷ்னன் மற்றும் குஷ்பூ நடத்தி வரும் ஒரு நிகழ்ச்சிக்கு தற்போது பெரும் அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இது குறித்து முன்னாள் ஹீரோயின்கள் ஸ்ரீ பிரியா மற்றும், ரஞ்சனி ஆகியோர் தங்களது கருத்தை சமீபத்தில் தெரிவித்தனர் இதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுக்குறித்து தற்போது பேசிய ஸ்ரீப்ரியா குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனை கேலி செய்வது போல் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பேசுகையில் ‘லட்சுமி ராமகிருஷ்ணன் எனக்கு பெண் பிள்ளைகள் உள்ளது என்றும் , அதனால் நிகழ்ச்சிகளை எப்படி நடத்த வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என்று கூறியுள்ளார்.
அதற்கு ஸ்ரீப்ரியா ‘ஏம்மா இதெல்லாம் ஒரு தகுதியாம்மா, எனக்கு ஒரு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
கவுன்ஸிலிங் என்பது பல கட்டங்களில் நடப்பது, 45 நிமிடம் ஷோவில் எப்படி தீர்வு கிடைக்கும் என்று தெரியவில்லை’ என்று கேலி தனமாக தனது கருத்தை கூறியுள்ளார்.
இதன் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணனை செம கலாய் கலாய்துள்ளார் ஸ்ரீ பிரியா...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.