இந்த நிலையிலும் 'பாட்ஷா' பார்த்த கருணாநிதி....!!!

First Published Dec 17, 2016, 5:53 PM IST
Highlights


திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் இரண்டாவது முறையாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரது உடல் நிலை பற்றி அறிய, பல அரசியல் தலைவர்களும், பிரபலங்கம் அவரது உடல் நலம் பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான 'பாட்ஷா' திரைப்படம் டிஜிட்டல் மற்றும் 5.1 ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு அதன் டிரைலர் நேற்று வெளியானது.

இந்த டிரைலரை நேற்று திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் லேப்டாப்பில் பார்த்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் நீண்ட கால நண்பர்கள் என்பதும் சமீபத்தில் கருணாநிதியை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததுதான்.

click me!