
அமீர்கான் நடித்துள்ள 'டங்கல்' திரைப்படம் வரும் 23ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் தமிழ் பதிப்பில் தன்னுடைய கேரக்டருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் அமீர்கான்.
ஆனால் இதற்கு ரஜினி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள அமீர்கான்.
'டங்கல்' படத்திற்கு ரஜினியின் குரல் பொருத்தமாக இருக்கும் என்று கருதி ரஜினியிடம் கோரிக்கை விடுத்தேன்.
ஆனால் என்னுடைய முகத்திற்கு அவருடைய குரல் பொருந்தாது என்று ரஜினி கூறினார். அவர் கூறியதை நானும் ஏற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் 'டங்கல்' படத்தை பார்த்து என்னுடைய கேரக்டரையும், படத்தையும் வெகுவாக ரஜினி பாராட்டினார்' என்று கூறினார் அமீர்கான் .
மேலும் தான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அவருடன் நடிக்க மிகுந்த ஆவலுடன் உள்ளதாகவும் அமீர்கான் தெரிவித்தார்.
ரஜினி நடித்து வரும் '2.0' படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் தானும் ஒருவன்' என்றும் அமீர்கான் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.