
கடந்த நான்கு நாட்களாக, கோலிவுட் வட்டாரத்தில் காட்டு தீ போல் எரிந்து வருகிறது metoo ஹாஷ்டாக் குற்றச்சாட்டு பிரச்சனை. இதன் மூலம் பெண்கள் பலர் கோலிவுட் திரையுலகினர் மீது தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் பாலியல் புகார்களை அடுக்கி வருகிறார்கள்.
ஏற்கனவே, metoo இயக்கம் துவங்கப்பட்டாலும், சின்மயி கவிஞர் வைரமுத்து மீது புகார் கொடுக்க துவங்கிய பிறகு தான், வரிசையாக பலர் வைரமுத்து உட்பட பலர் தங்களுக்கு கொடுத்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர், நடனம் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, தான் சென்னை வந்து, நடன இயக்குனர் கல்யாணிடம் நடன பயிற்சிக்கு வந்ததாகவும். அப்போது அவர் தன்னை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு... தனக்கு உதவியாளராக பணியாற்ற வேண்டும் என்றால் தன்னோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியதால், கனவு நிறைவேறாமலே தான் மீண்டும் இலங்கை சென்று விட்டதாக ஒரு ட்விட் போட்டார்.
இந்த தகவலை பாடகி சின்மயி, அவருடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது சின்மயி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது... இலங்கை பெண் என்று கூறி, நடன இயக்குனர் கல்யாண் மீது குற்றம் சாட்டிய பெண் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார். இப்படி கூட செய்வார்களா? என ட்விட் போட்டுள்ளார். மேலும் இப்படி பிரபலங்களை வைத்து விளையாட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு, நெட்டிசன்கள் சிலர் "இப்படி அப்பாவியை மனுஷனை மாட்டி விட்டு அசிங்கப்படுத்திட்டு, நைசாக நழுவுறீங்க சின்மயி என்று... கூறிவருகிறார்கள்..! இப்படி பட்ட கேள்விகளால் கண்டிப்பாக செம கடுப்பில் இருப்பர் சின்மயி என்பது மட்டும் உண்மை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.