
கோலிவுட் திரையுலகில், அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய், இவரை பற்றி எந்த தகவல் வெளியானாலும், உடனடியாக அதனை ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள். அதே போல் இவருடைய பிள்ளைகளும் பற்றி வந்தால் சொல்லவா வேண்டும்...!
பொதுவாகவே குழந்தைகளுக்கு முதல் ஹீரோ அவர்களுடைய அப்பா தான். அதே போல் என்ன தான் நடிகர் விஜய்யின் மகனுக்கு அவருடைய அப்பா ஹீரோவாக இருந்தாலும், அவரை தவிர்த்து அஜித் மற்றும் விஜய் சேதுபதியை பிடிக்கும் என சஞ்சய் கூறியதாக ஒரு தகவல் வைரலாக பரவியது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
சில அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இதனால் சமூக வலைத்தளத்தில் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் பி.ஆர்.ஓ.ரியாஸ்.
இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள பிஆர்ஓ ரியாஸ், “ விஜய் மகன் சஞ்சய் கூறியுள்ளதாக வெளியான இன்ஸ்டகிராம் பதிவுகளைக் கண்டோருக்கு ஒரு விளக்கம். விஜய்யின் மகன் சஞ்சய்யோ விஜய் மகள் திவ்யாவோ எந்தவிதமான சமூக வலைதளங்களிலுமே இல்லை. எனவே போலியான சமூக வலைதள பக்கங்களை நம்ப வேண்டாம் என தளபதி ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் வைக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.
இவருடைய இந்த விளக்கத்தால், சமூக வலைத்தளத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி பரவிய வதந்திக்கு முடிவு எட்டியுள்ளது.
நடிகர் விஜய்யின் மகன், வேட்டைக்காரன் படத்தில் சிறு வயதில் நடனம் ஆடியுள்ளார். அதே போல் மகள் திவ்யா 'தெறி' படத்தில் கடைசி காட்சியில் விஜய்யின் மகளாகவே வந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.