
நடிகர் விஜய்-ஐ பார்த்து பல அரசியல் தலைவர்கள் பயப்படுவதாகவும், அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பலருக்கு வயிறு
எரிகிறது என்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.
144 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கரணி நடைபெற்று வருகிறது. மகாபுஷ்கரணியில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், மகாபுஷ்கரணியில் பங்கேற்றார். அப்போது, தாமிரபரணி ஆற்றில் குளித்தார். இதன் பிறகு, அருகில் உள்ள கோயிலுக்கு சென்ற அவர், அங்கு பூஜைகள் செய்தார். கோயிலில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர். கேரளா மற்றும்
கர்நாடகாவில் அவரை தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள். அமெரிக்க தமிழர்களும் விஜய்யை கொண்டாடி மகிழ்கிறார்கள். இவ்வளவு புகழ்பெற்ற ஒருவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
விஜய், அரசியலுக்கு வருவதற்கு முன்பே பலருக்கு வயிறு பற்றி எரிகிறது. இவர்கள் விஜய்யைப் பார்த்து பயப்பட வேண்டிய
அவசியம்தான் என்ன? இவ்வளவு ரசிகர்கள் செல்வாக்கு பெற்ற விஜய், அரசியலுக்கு வரக்கூடாதா? என கேள்வி எழுப்பினார்.
விஜய் மக்களுக்கு நல்லது செய்தே ஆக வேண்டும், அதுவும் தமிழன் என்ற முறையில் தமிழர்களுக்கு நல்லது செய்தே ஆக வேண்டும் என உறுதியாக இருப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். எனவே, விஜய் அரசியலுக்கு வருவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதேயே இயக்குனரும் அவரது தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரனின் பேட்டி வெட்டவெளிச்சமாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.