
ஜீ ஸ்டூடியோஸ், போனி கபூர் இணைந்து வழங்க a Mad Films & Third Eye Productions தயாரிப்பில் ஸ்ரீதேவி நடிக்கும், "மாம்" திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார்.
அக்ஷய் கண்ணா, நவாசுதின் சித்திக்கி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், எ மைடி ஹார்ட் என்ற ஹாலிவுட் படத்தில், ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்த அத்னன் சித்திகி இப்படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்துள்ளார்.
இதில் அத்னனின் தேர்வுக்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. படக்குழு கூறுகையில், "ஜான்விக்கு அத்னனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்கு அவர் நடித்த மைட்டி ஹார்ட் படம் ஒரு காரணம். அத்னன் சித்திகியை இந்தப் படத்தின் தேர்வுக்கு வர சம்மதிக்க வைத்தனர். பிறகு போனிகபூர் உடனடியாக அத்னனின் குழுவிடம் பேசி அவரைப் படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டார்” என்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.